அழகு பதுமையாக மாறி இருக்கும் புதிய டாடா நெக்ஸானின் விலை இவ்ளோ தானா!.. நாம மட்டுமில்லைங்க டாடாவே பதறிடுச்சு!
டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற கார் மாடல்களில் நெக்ஸான் (Nexon)-ம் ஒன்றாகும். இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது.
நெக்ஸானின் அப்டேட் வெர்ஷனை அது விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஏற்கனவே இதன் வெளியீட்டு நிகழ்வு அரங்கேறிவிட்ட நிலையில், தற்போது அதை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியிலேயே டாடா ஈடுபட்டு வருகின்றது. வருகின்ற 14 ஆம் தேதி அன்றே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் நெக்ஸான் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இந்த நாளிலேயே மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் உருவாகி இருக்கும் புதிய நெக்ஸானின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட இருக்கின்றன. செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று டாடா மோட்டார்ஸ் அதன் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸானின் விலையை மட்டுமல்ல நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்டின் விலைகளும் அறிவிக்க இருக்கின்றது.
இந்த நிலையிலேயே தவறுதலாக டாடா நெக்ஸான் ஐசிஇ வெர்ஷனின் விலைகள் வெளியாகி இருக்கின்றது. இணையத்தில் ஒருவர் புதிய நெக்ஸானின் விலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்கின்றார். அதற்கு பதிலளித்த டாடா மோட்டார்ஸைச் சேர்ந்த ஓர் நபர், ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானின் ஆரம்ப விலை வேரியண்டின் விலை தவறுதலாக வெளியிட்டு இருக்கின்றார்.

அவர் வெளியிட்ட தகவலின்படி, ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 7.39 லட்சம் என்பது தெரிய வந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே ஊழியர் தவறுதலாக விலை விபரத்தை வெளியிட்டது ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
தவறை உணர்ந்த ஊழியர் விரைவிலேயே அதன் விலை விபரத்தை நீக்கிவிட்டார். இருப்பினும், வாகன ஆர்வலர் ஒருவர் அதை உடனடியாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பரப்பிவிட்டார். தற்போது இந்த தகவலே இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. இந்த தகவல் காட்டு தீயை போல் வேகமாக பரவி வருகின்ற இந்தவேளையில், டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக ஓர் பதிவை வெளியிட்டு இருக்கின்றது.

"தாங்கள் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக புதிய நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி ஆகியவற்றின் விலைகளை அறிவிக்க இருக்கின்றோம். இணையத்தில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என அறிவுறுத்தி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நெக்ஸானை வெற லெவலில் அப்கிரேட் செய்திருக்கின்றது.
மிக சமீபத்திலேயே இந்த காரை நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். பல விஷயங்களில் இந்த கார் எங்களின் மனதை கவரும் வகையில் இருந்தது. குறிப்பாக, காருக்குள் இருக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் இறைச்சல்களை டாடா மோட்டார்ஸ் பலமடங்கு குறைத்து நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க ஏற்கனவே கர்வியான தோற்றம் கொண்டிருக்கும் நெக்ஸானுக்கு இன்னும் கூடுதல் கர்வியான தோற்றத்தை தற்போது வழங்கி இருக்கின்றது. இந்த கர்வி தோற்றம் நிறுவனத்தின் கர்வ் கான்செப்ட் மாடலில் இருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது வெளியாகி இருக்கும் விலை விபரம் உண்மையாகும் எனில் டாடா மோட்டார்ஸ் அதன் போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய போட்டியாளனாக மாறிவிடும்.
இந்த கார் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய நெக்ஸானில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது.
இதில், பெட்ரோல் மோட்டார் 118.2 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டீசல் மோட்டார் ஆப்ஷன் 113.3 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பெட்ரோல் மோட்டார் தேர்வில் 5 மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட இருகக்கின்றது.
இதேபோல், டீசல் மோட்டாரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. அனைத்தும் 6 ஸ்பீடு கொண்டவை ஆகும். புதிய நெக்ஸான் ஃபியர்லெஸ் பர்பிள் (Fearless Purple), கிரியேட்டீவ் ஓசோன் (Creative Ocean), பிரிஸ்டைன் ஒயிட் (Pristine White), ப்யூர் கிரே (Pure Grey), டேடோனா கிரே (Daytona Grey) மற்றும் ஃப்ளேம் ரெட் (Flame Red) ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரே இந்த நெக்ஸான் ஆகும். இது அதிக பாதுகாப்பு திறனைக் கொண்டதும்கூட. பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதகாப்பு ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது. இத்தகைய தரமான கார் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனையே டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









