மாருதி, ஹூண்டாய் கார் எல்லாம் ஓரமா போ!! டாடா நெக்ஸான் காரை தான் இனி எல்லாரும் வாங்க போறாங்க!

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon Facelift) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 1) வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. புதிய டாடா நெக்ஸான் காரின் வேரியண்ட்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன? காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை எந்த அளவில் எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகளை தெரிந்துக் கொள்ள வாருங்கள் செய்திக்குள் போவோம்.

இந்தியாவில் தற்சமயம் பலரால் வாங்கப்படும் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் ஆகும். ஆனால் சமீப காலமாக நெக்ஸான் கார்களின் விற்பனை சற்று குறைய துவங்கியுள்ளது. இதனை கவனித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உடனடியாக நெக்ஸானில் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை கொண்டுவருவதாக அறிவித்தது. அதன்படி, விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

tata nexon facelift revealed

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்றாலே பொதுவாக காரின் முன் & பின்பக்கங்கள் திருத்தப்படுவது வழக்கம். அதன்படி, டாடா நெக்ஸானின் முன்பக்கமும், பின்பக்கமும் தோற்றத்தில் மெருக்கேற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக, நெக்ஸானின் முன்பக்கத்தில் பிளவுப்பட்ட வடிவில், இரு பிரிவுகளாக செயல்படும் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, ஹெட்லேம்ப்கள் டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படும்.

அத்துடன், முன்பக்க கிரில்லின் டிசைனும் மாற்றப்பட்டு உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் நெக்ஸான் காரில் நம்பர் பிளேட்டிற்கு மேலே காற்று உள்ளே செல்ல மெல்லியதான துளைகள் இருக்கும். ஆனால் புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் இந்த ஏர் இண்டேக் துளைகள் சற்று பெரியதாக்கப்பட்டு உள்ளன. கிரில்லிற்கு இரு பக்கங்களிலும் வழங்கப்படும் ஃபாக் விளக்குகளுக்கான குழிகளின் வடிவமும் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

காரின் பக்கவாட்டிற்கு சென்றால், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் நம்மை வசீகரிக்கின்றன. புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் கிரவுண்ட் கிளியரென்ஸ், அதாவது தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் இடையேயான உயரம் 208மிமீ என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய நெக்ஸான் காரின் பின்பக்கத்தில், Y-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள் இரண்டும் ஒளிரக்கூடிய ஸ்ட்ரிப் மூலமாக இணைக்கப்பட்டு உள்ளன.

காரின் முன்பக்க பம்பரின் வடிவம் பெரியதாக மாற்றப்படவில்லை என்றாலும், பின்பக்க பம்பர் கவனிக்கத்தக்க விதத்தில் மாற்றப்பட்டுள்ளது. காரின் பின்பக்கத்தில், பம்பருக்கு மேலே டெயில்லேம்ப்களுக்கு கீழே நீள் செவ்வக வடிவில் ஒளி பிரதிப்பலிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை, டெயில்லேம்ப்களின் 'Y' டிசைனுக்கு நன்கு எடுப்பாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

பின்பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடியை துடைக்கும் வைபர்கள் பின்பக்க ஸ்பாய்லருக்கு அடியில் நன்கு மறைப்பாக வழங்கப்பட்டு உள்ளன. இதனால், வெளியே இருந்து பார்த்தாலும் வைபர்கள் நம் கண்ணுக்கு தெரியவில்லை. அப்படியே காருக்கு உள்ளே சென்றால், டேஸ்போர்டு 3 நிறங்களில், புதிய டிசைனில் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, டேஸ்போர்டின் மேல் பாதி கருப்பு நிறத்திலும், கீழ் பாதி இண்டிகோ என்ற அடர் நீல நிறத்திலும் உள்ளது.

இதில் இண்டிகோ நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள டேஸ்போர்டின் கீழ்பகுதி மென்மையான மெட்டீரியல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் பிரிக்கும் விதமாக மத்தியில் கிரே நிறத்தில் ஒரு லைன் செல்கிறது. டேஸ்போர்டுக்கு அடுத்து, புதிய நெக்ஸான் காரின் உள்ளே நம்மை வசீகரிப்பது என்னவென்றால், 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் ஆகும். இத்தகைய ஸ்டேரிங் சக்கரத்தை ஆட்டோ எக்ஸ்போவில் டாடா சார்பில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட கர்வ் கான்செப்ட் மாதிரியில் பார்த்து இருப்பீர்கள்.

ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் வழங்கப்பட்டுள்ள ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் திரையை விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்துக் கொள்லலாம். இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் அளவு 10.25 இன்ச்களாக அதிகரித்துள்ளது. ஏசி-க்கான பேனல் டச் மூலமாக செயல்படக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே, மைய கன்சோல் பகுதியில் வயர்லெஸ் சார்ஜிங் பேட் வழங்கப்பட்டு உள்ளது.

இவை தவிர்த்து, மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் அனைத்தும் தற்போதைய நெக்ஸான் காரில் இருந்து அப்படியே வழங்கப்பட்டுள்ளன. என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கூட எந்த மாற்றமும் இல்லை. ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ப்யூர், கிரியேட்டீவ், கிரியேட்டீவ்+ மற்றும் ஃபியர்லெஸ் என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய தினமே டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு, கார் அதிகாரப்பூர்வமாக சந்தையில் அறிமுகம் செய்யப்படும். இந்திய மார்க்கெட்டில் டாடா நெக்ஸானுக்கு மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின் மூலம் டாடா நெக்ஸான் காரின் தோற்றம் மெருக்கேறியுள்ளது. குறிப்பாக, காரின் முன்பக்கம் பார்ப்போரை உடனடியாக கவரக்கூடியதாக உள்ளதை சொல்லியே ஆக வேண்டும். என்ஜின் & கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் டாடா நெக்ஸானை சந்தையில் இன்னும் சில வருடங்களுக்கு டிரெண்டில் வைத்திருக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, September 1, 2023, 22:37 [IST]
English summary
Tata nexon facelift revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+