டாடா உருவாக்கியுள்ள காருக்கு முன் வெளிநாட்டு கார்களே தோற்றுப்போகும்!! ஸ்டைலை பாருங்க எப்படி இருக்கிறது என்று..

டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon EV Facelift) கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த புதிய காரின் மாதிரி ஒன்று சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸின் நம்பிக்கைக்குரிய மாடலாக சமீப காலமாக விளங்கி வருவது நெக்ஸான் ஆகும். டாடா மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்கும் நெக்ஸான் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிக பேரால வாங்கப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனாலேயே நெக்ஸானை அப்டேட் செய்யும் முனைப்பில் டாடா நிறுவனம் உள்ளது.

tata nexon facelift spied

இந்தியாவில் டாடா நெக்ஸான் மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் என்பவை அவை 3 ஆகும். இதில், எலக்ட்ரிக் வெர்சன் ஆனது நெக்ஸான் இவி என அழைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக விளங்கும் நெக்ஸான் இவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனை விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிய டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த செப்டம்பர் 14ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த காரின் சோதனை மாதிரி பொது சாலையில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, திவேஷ் பாட்டியா பாகி என்பவர் மூலம் கிடைத்துள்ள ஸ்பை படங்களை தான் இங்கே காண்கிறீர்கள்.

2020இல் முதன்முறையாக நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன்பின் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறுகிறது. புதிய நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்டில் முக்கியமான மாற்றங்கள் அதன் தோற்றத்தில் தான் கொண்டுவரப்படுகின்றன. ஏனெனில், புதிய நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றம் ஆனது டாடா மோட்டார்ஸின் கர்வ் கான்செப்ட் எலக்ட்ரிக் வாகனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு உள்ளது.

tata nexon facelift spied

Image Courtesy: Divesh Bhatia Baaghi

இதே கர்வ் இவி கான்செப்ட்டில் இருந்துதான் புதிய ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் தோற்றத்தையும் கொண்டுவர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது, புதிய நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் புதிய வடிவிலான பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட்களை புதிய எல்இடி டிஆர்எல்-கள் உடன் பெற்று வருகிறது. இதே போன்றதான ஹெட்லைட் அமைப்பையே எலக்ட்ரிக் அல்லாத நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், காரின் முன்பக்கத்தில் கிரில் மற்றும் பம்பர் போன்றவற்றையும் புதிய வடிவில் எதிர்பார்க்கிறோம். புதிய நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரில் கிரில் அமைப்பை மூடியதாக எதிர்பார்க்கிறோம். அதுபோன்று, காரின் பின்பக்கத்திலும் ரீடிசைனிலான எல்இடி டெயில்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான பம்பர் எதிர்பார்க்கப்படுகிறது. காரின் பக்கவாட்டில் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்படும்.

காரின் உட்பக்கத்தில் மிக முக்கிய அப்டேட்டாக புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே டேஸ்போர்டின் மையத்தில் வழங்கப்பட உள்ளது. அத்துடன், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரையும் அப்டேட் செய்யப்பட உள்ளது. புதிய 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் புதிய கேபின் உள்ளமைவையும் புதிய நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரும் என கூறப்படுகிறது. மற்றப்படி, பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டாரில் எந்த மாற்றமும் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் எஸ்யூவி கார்களுக்கு இந்திய சந்தையில் மிக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனை தக்க வைத்துக் கொள்ள இவ்வாறான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் அவசியமாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால், நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை தொடர்ந்து புத்துணர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் டாடா மோடடர்ஸுக்கு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 29, 2023, 19:28 [IST]
English summary
Tata nexon facelift spied ahead of launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+