ஃபோர்டு என்டீயோவரோட ஒரு பக்கமே காலி... சம்பவத்த செஞ்சது எந்த காருனு தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

மிகவும் பிரமாண்டமான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக காரே ஃபோர்டு என்டீயோவர். அதிக உறுதித் தன்மைக்கும், பாதுகாப்பு திறனுக்கும் பெயர்போன கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த காரையே வெறொரு வாகனம் விபத்தின் வாயிலாக முழுமையாக சிதைத்து தள்ளி இருக்கின்றது. என்டீயோவரின் ஒரு பக்கத்தையே காலி செய்திருக்கின்றது.

இடது பக்கம் முழுவதுமாக உருக்குலைந்து போயிருக்கின்றது. மிக அதிக வேகத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ஃபோர்டு என்டீயோவரை இந்த அளவிற்கு சேதப்படுத்தியது எந்த வாகனம் என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம். மேலும், காரின் நிலையை பார்க்கையில் பெரிய லாரி அல்லது பஸ் வந்து மோதி இருக்குமோ எனவும் நீங்கள் நினைக்கலாம்.

விபத்து

ஆனால், அதுதான் இல்லைங்க. என்டீயோவரை விட அளவில் பல மடங்கு குறைவான ஓர் வாகனமே மோதி, இந்த அளவிற்கு பெருத்த சேதத்தை அக்-காரில் ஏற்படுத்தி இருக்கின்றது. அது வேறு எந்த காரும் இல்லைங்க நம்ம டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற தயாரிப்பான நெக்ஸான் இவி ஆகும்.

இதுவும் பாதுகாப்பு திறனுக்கு பெயர்போன கார் மாடல் ஆகும். கடந்த காலங்களில் இதன் பெட்ரோல் வெர்ஷன் மிகப் பெரிய விபத்தை சந்தித்த போதிலும், அதற்குள் பயணித்தவர்களுக்கு அதீத பாதுகாப்பை வழங்கியிருக்கின்றது. அதாவது, பெரியளவில் பாதிப்பின்றி பத்திரமாக பயணிகளைப் பாதுகாத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இப்புதிய விபத்தின் வாயிலாகவும் தான் ஒரு மிக சிறந்த பாதுகாப்பானவன் என்பதை டாடா நெக்ஸான் நிரூபித்திருக்கின்றது.

விபத்து

அதீத வேகத்தின் காரணத்தினாலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஃபோர்டு என்டீயோவரே அதீத வேகத்தில் வந்திருக்கின்றது. இந்த நிலையில் வெள்ளை நிற நெக்ஸான் இவி குறுக்கே வரவே அப்போது கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது மோதி இருக்கின்றது. அதீத வேகம் மற்றும் சிக்னலை மீறி சென்றது இவையே இந்த விபத்திற்கான மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

இதனால்தான் போக்குவரத்து விதிகளை எப்போதும் மீற கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. சிக்னலை மீறி வந்த நெக்ஸான் இவி, அதீத வேகத்தில் வந்த என்டீயோவர் ஆகிய இரண்டும் இந்த விபத்தால் கடுமையாக சேதம் அடைந்திருக்கின்றன. விபத்தினால் நெக்ஸான் இவி-யின் முகப்பு பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அதன் முன் பக்கம் முழுமையாக உருக்குலைந்து போய்விட்டது. இருப்பினும் காருக்குள் இருந்தவர்கள் அதிரஷ்டவசமாக எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். அதேவேளையில், என்டீயோவரின் பக்கவாட்டு பகுதி முழுமையாக சிதைந்து போய்விட்டது. முன் பக்க இடது வீல் தனியாக கழண்டு வரும் அளவிற்கு அது பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே, காருக்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி இருக்கின்றனர். இதற்கு கார்களின் உறுதியான கட்டுமானமும், அதில் வழங்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு கருவிகளுமே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. இரண்டும் அதிக பாதுகாப்பான வாகன மாடல்கள் ஆகும். குறிப்பாக, டாடா நெக்ஸான் மிக மிக அதிக பாதுகாப்பான வாகனமாகும்.

விபத்து

குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்றிருக்கின்றது. ஆனால், இதன் மின்சார வெர்ஷன் இதுவரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இரண்டும் ஒரே கட்டுமானத்தை பெற்றிருக்கின்றன. ஆகையால், மின்சாரம் மற்றும் பெட்ரோல் இரண்டு வெர்சன்களும் அதிக துகாப்பு திறன் கொண்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நெக்ஸான் காரை போலவே சூப்பரான பாதுகாப்பு திறன் கொண்ட காரே என்டீயோவர் ஆகும். இந்த கார் இப்போது விற்பனையில் இல்லை. ஃபோர்டு என்டீயோவர் நிறுவனம் சந்தையை விட்டு வெளியேறியதனால் இதன் விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில் இக்காரை செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 14, 2023, 20:21 [IST]
English summary
Tata nexon ford endeavour crashed
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+