70 கிமீ வேகத்தில் பறந்த கார்.. குறுக்கே வந்த கௌ(மாடு)சிக்.. லேசான மனம் உள்ளவர்கள் வீடியோவை ஸ்கிப் பண்ணிடுங்க!
கார் ஒன்று மணிக்கு 70கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்து மோதும் காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றன. மாடுடன் மோதலைச் சந்தித்தது எந்த கார்? காரில் பயணித்த பயணிகள் மற்றும் அந்த மாட்டிற்கு என்னவாகியது உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற கார் மாடலே இப்போது மாட்டுடன் மோதலைச் சந்தித்து இருக்கின்றது. இந்த ஒரு ஹிண்டே உங்களுக்கு இது என்ன கார் என்பதை தெரியப்படுத்தி இருக்கும் என நம்புகின்றோம். நீங்கள் யூகித்தது டாடா நெக்ஸான் என்றால் உங்களின் அது சரிதான். இந்த காரே மாட்டுடன் மோதலைச் சந்தித்து விபத்துக்கு ஆளாகிய கார் ஆகும்.

மாடுடன் மோதலைச் சந்தித்த காரணத்தினால் இந்த காரின் முகப்பு பகுதி லேசான சேதத்தைச் சந்தித்து இருக்கின்றது. அதேவேளையில், அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்து பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல், கார் மீது மோதிய மாடும் உயிருடன் எழுந்து ஓடி இருக்கின்றது. இதை வீடியோவில் நம்மாலும் பார்க்க முடிகின்றது.
மாடு மீது மோதும் முன்னரே பிரேக்கை ஓட்டுநர் பிடித்த காரணத்தினால், அதன் அதிக வேகம் லேசாக குறைந்திருக்கின்றது. இருப்பினும், மணிக்கு 70 கிமீ வேகத்தில் சென்று மோதியதனால் அதன் தாக்கம் மாடு மீது சற்று கடுமையாகவே இருந்திருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே அந்த மாடு சில அடிகள் தூரம் தூக்கி வீசப்பட்டது.

மேலும், காரின் பான்னெட்டும் நொருங்கியது. ஆனால், பெரிய அளவில் நெக்ஸான் காரில் பாதிப்பு ஏற்படவில்லை. மாடுடன் மோதிய பின்னரும் நெக்ஸான் இயங்கும் நிலையிலேயே இருந்தது. இந்த நிலையை பார்க்கையில் நெக்ஸான் காருக்கு ஐந்து என்ன பத்து ஸ்டார்களே கொடுக்கலாம் என கூறும் வகையில் உள்ளது.
ஒட்டுமொத்த விபத்து சம்பவமும் காரின் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டு இருந்த டேஷ் கேமிராவில் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் சவாலானது என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

ஒரு பக்கம் பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலைகள் பயணத்தை மிக மோசமானதாக ஆக்குகின்றன என்றால் மற்றொரு பக்கம் சாலையோர விலங்குகளும் வாகன பயன்பாட்டை மிகுந்த சவாலானதாக மாற்றுகின்றன. குறிப்பாக, மாடு மற்றும் நாய்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமானதாக உள்ளன. இவற்றால் ஏற்படும் விபத்துகளும் நாட்டில் அதிகம்.
அவையும் சாலை விபத்தினாலேயே அதிகளவில் இறக்கின்றன. இந்த நிலையிலேயே மாடுடனான விபத்தை நெக்ஸான் சந்தித்து இருக்கின்றது. டாடா நெக்ஸான் கார் அதிக வேகத்தில் சென்று விபத்தைச் சந்திப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. இந்த கார் இதற்கு முன்னதாகவும் அதிக வேகத்தினால் விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.
அந்த விபத்திலும் டாடா நெக்ஸான் அதில் பயணித்த பயணிகளுக்கு இரும்பு அரணாக இருந்து பாதுகாப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா நெக்ஸான் இந்தியாவில் ரூ. 7.79 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இதன் அதிகபட்ச விலையே ரூ. 14.30 லட்சம் மட்டுமே ஆகும். இந்த கார் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என பல அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஐசிஐ எஞ்ஜின் கொண்ட வெர்ஷனுக்கு கிடைப்பதைப் போலவே மின்சார வெர்ஷனுக்கும் நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் டாப் பெஸ்ட் பாதுகாப்பான கார் எது என எங்களைக் கேட்டால் காட்டயாம் கட்டாயம் முதலில் நாங்கள் டாடா நெக்ஸானையே கை காட்டுவோம். இதற்கு அடுத்தபடியாக டாடாவின் பஞ்ச் காரும் அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாக இருக்கின்றது. இரண்டும் குறைவான விலையில் கிடைப்பவை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









