டாடா இப்படி பண்ணும்னு யாருமே எதிர்பாக்கல.. இனி இதுவும் நமக்கு எட்டா கனிதானா! கொஞ்சம் டாடா யோசிச்சிருக்கலாம்!
டாடா டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஒன்றின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த கார் மாடலின் விலையை உயர்த்தி இருக்கின்றது?, எவ்வளவு ரூபாய் உயர்த்தி இருக்கின்றது?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று நெக்ஸான். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதன் விலையையே டாடா தற்போது உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

5 ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ. 20 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆரம்ப நிலை வேரியண்டான எக்ஸ்இ தேர்வின் விலையிலேயே நிறுவனம் ரூ. 20 ஆயிரம் வரை உயர்வு செய்து இருக்கின்றது. இதேபோல், எக்ஸ்எம்ஏ பிளஸ் (எஸ்) டீசல் வேரியண்டின் விலையிலும் ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, இன்னும் சில தேர்வுகளின் விலையில் ரூ.10 ஆயிரம் வரை உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்எம் பிளஸ்(எஸ்), எக்ஸ்எம்ஏ பிளஸ்(எஸ்), எக்ஸ்இசட் பிளஸ் காசிரங்கா, எக்ஸ்இசட்ஏ பிளஸ் லக்ஸ் காசிரங்கா, எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ஜெட், எக்ஸ்இசட் பிளஸ் டீசல் ஜெட், எக்ஸ்இசட்ஏ பிளஸ் லக்ஸ் ஜெட் மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் டீசல் ஜெட் ஆகிய தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்தின் விலையிலும் ரூ10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், டாடா நெக்ஸான் தற்போது சற்று காஸ்ட்லியான வாகனமாக மாறி இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனமாகும். இதன் காரணத்தினாலும், சற்று குறைவான விலையில் இது விற்பனைக்குக் கிடைத்த காரணத்தினாலும் இந்தியர்கள் மத்தியில் நெக்ஸானுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே டாடா மோட்டார்ஸ் இந்த காரின் விலையை உயர்த்தி இருக்கின்றது. எனவே இந்த நிலை நெக்ஸானின் விற்பனையைப் பாதிக்கச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், ஒரு சிலர் இந்த காரின் இப்போதைய விலை உயர்வு அதைக் காஸ்ட்லியானதாக மாற்றினாலும், அது அந்த காருக்கு ஒர்த்தானதே என கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆமாங்க, அந்த அளவிற்கு பாதுகாப்பான கார் மாடலே நெக்ஸான் ஆகும். இது குளோபல் என்சிஏபி-யின் மோதல் ஆய்வில் 5க்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற பாதுகாப்பு திறன்மிக்க காராகும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக நெக்ஸான் இருக்கின்றது. இதனால் இந்தியாவில் இந்த காரை வாங்குவோரின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது.
இதன் விளைவாக வெகு சமீபத்திலேயே இந்த கார் 5 லட்சம் யூனிட் விற்பனையை எட்டியது. இப்போதைய நிலவரப்படி இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவட்ரோன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் ரெவோடார்க் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே நெக்ஸான் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்த மோட்டார்களுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், 6 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனாகவும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக டாடா நெக்ஸான் எஸ்யூவி 2017 செப்டம்பரிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது விற்பனைக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான வருடங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே சமீபத்தில் 5 லட்சம் யூனிட் விற்பனையை அக்கார் எட்டியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் காரின் விலையை உயர்த்தி இருப்பது அந்த கார் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வளவு அதிக தொகையை டாடா உயர்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதேவேளையில் இந்த நிறுவனம் விலை உயர்வை செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








