மிகவும் பாதுகாப்பான காருக்கே இந்த நிலைமையா! இப்படி நடக்கும்னு டாடா நிறுவனம் கனவுல கூட நெனச்சு பாத்திருக்காது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான டாடா நெக்ஸான் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 14,916 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது.

Tata Nexon Facelift

எனினும் இது விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 15,871 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,916 ஆக குறைந்துள்ளது. இது 6 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இந்த சரிவிற்கான காரணம் என்ன? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் வரும் மாதங்களில் டாடா நெக்ஸான் கார் இந்த சிறிய சரிவில் இருந்து மீண்டு வரும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். டாடா நெக்ஸான் காரானது, பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2023 Tata Nexon EV

இதன் ஐசி இன்ஜின் வெர்ஷன்களின் ஆரம்ப விலை 8.10 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்களின் விலை 15.50 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷன்களின் ஆரம்ப விலை 14.74 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்களின் விலை 19.94 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனையில் சிறிய வீழ்ச்சியை சந்தித்துள்ள டாடா நெக்ஸான் கார், மிகவும் பாதுகாப்பானது ஆகும். இன்னும் சொல்லப்போனால் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய முதல் 'மேட் இன் இந்தியா' கார், டாடா நெக்ஸான்தான்!

இதற்கு பிறகுதான், மற்ற இந்திய கார்கள் எல்லாம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்க தொடங்கின. சாலை விபத்துக்களில் இருந்து நிறைய முறை பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் கார் காப்பாற்றியுள்ளது. இந்த காரின் பிரபலத்திற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

எனவே வரும் மாதங்களில், இந்த விற்பனை சரிவில் இருந்து டாடா நெக்ஸான் மீண்டு வரும் என நாங்கள் கருதுகிறோம். டாடா நெக்ஸான் காரின் மற்றொரு பலம் என்னவென்றால், ஐசி இன்ஜின், எலெக்ட்ரிக் வெர்ஷன் மற்றும் நிறைய வேரியண்ட்கள் என்பதுதான். இதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் டாடா நெக்ஸான் பூர்த்தி செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 23:58 [IST]
English summary
Tata nexon registers degrowth of 6 per cent in november 2023 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+