இப்படி ஒரு காரையா டாடா இன்னும் கொஞ்ச நாள்ல விற்பனைக்கு கொண்டு வரபோகுது! நெக்ஸான் ரைடு ரிவியூ வீடியோ! தமிழில்..
டாடா மோட்டார்ஸ் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 2023 நெக்ஸான் (Tata Nexon) காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. பன்முக புதிய அம்சங்கள் மற்றும் அலங்கரிப்புகளைக் கொண்ட காராகவே இதனை டாடா வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் நெக்சானைக் காட்டிலும் பலமடங்கு அழகிய ஒன்றாக புதிய நெக்ஸானை வடிவமைத்திருக்கின்றது.
இதனையே ரைடு செய்து பார்க்கும் வாய்ப்பு அண்மையில் எங்களுக்கு கிடைத்தது. புதிய நெக்ஸானை ஜெய்பூர் வைத்து நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த முக்கிய தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அத்துடன், தமிழில் வீடியோவையும் வெளியிட்டு இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மிகவும் அட்டகாசமான காராக புதிய நெக்ஸான் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. புதிய முகப்பு பகுதி மற்றும் பின் பக்கத்தை அதுக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் கர்வ் எனும் கான்செப்ட் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்தது. இந்த காரை தழுவி பல அம்சங்களை புதிய நெக்ஸானில் டாடா சேர்த்திருக்கின்றது.

ஆகையால், கவர்ச்சிக்கு சற்றும் குறைச்சலின்றி புதிய நெக்ஸான் காட்சியளிக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களும் புதிய நெக்ஸானில் வழங்கப்பட இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ வருகை இன்னும் ஒரு சில தினங்களில் அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








