டாடா நெக்ஸான் காரோட பெயரை மாத்தபோறாங்களா? புது பெயர் என்னது தெரியுமா?
டாடா நிறுவனம் தனது நெக்ஸான் காரின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அந்த காரின் பெயரில் சிறிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெயரில் என்ன மாற்றம் வரப்போகிறது? ஏன் இந்த பெயர் மாற்றம் கொண்டுவரப்படுகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இந்தியாவிலேயே பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறந்த காராக இருக்கிறது. இந்த காரின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. பாதுகாப்பான கார் என்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் டாப் இடத்தில் இந்த கார் இருக்கிறது.

இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இந்த காருக்கான பாதுகாப்பு அம்சங்கள் பாதுகாப்பு அமைப்புகள் எல்லாம் சிறப்பாக இருப்பதாக பல விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த நெக்ஸான் காரின் பேஸ்ஃலிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த கார் அறிமுகமாகவுள்ளது.
அதன்படி இந்த காரை டாடா நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது. அப்டேட் செய்யப்பட்ட காரை இந்திய சாலைகளில் டெஸ்ட் செய்து வருவதை கூட நாம் அங்கு காண முடிகிறது. புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்ஃலிப்ட் கார் சில காஸ்மெட்டிக் டச் அப்கள் மற்றும் சில பிரிமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் கார் தற்போது நான்கு மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி கார் செக்மெண்டில் அதிக போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இந்த கார் தற்போது மார்க்கெட்டில் 15 சதவீத பங்கை வைத்துள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வந்தால் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டாடா நிறுவனம் இதன் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் அறிமுகமாகும் போது இதன் பெயரில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதாவது பெயர் என்றால் நெக்ஸான் என்ற பெயரில் இல்லாமல் இதன் வேரியன்ட் பெயர்களில் மாற்றங்களை கொண்டு வருகிறது. தற்போது உள்ள வேரியன்ட் பெயரை முற்றிலுமாக நீக்கப்போகிறது.

தற்போது டாடா நெக்ஸான் காரில் எக்ஸ்இ, எக்ஸ் எம், எக்ஸ் எம் பிளஸ், எக்ஸ் இசட் பிளஸ் மற்றும் எக்ஸ் இசட் பிளஸ் லக்ஸ் என்ற பெயர்களில் இதன் வேரியன்ட்கள் இருக்கிறது. இந்தப் பெயரைப் படிக்கும் போதே சற்று குழப்பமாக இருக்கிறது அல்லவா குறிப்பாக புதிதாக கார் வாங்குபவர்களுக்கு இதன் வேரியன்ட் பெயர்கள் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் டாடா நிறுவனம் இந்த வேரியன்ட் பெயர்களை முற்றிலுமாக நீக்கிவிட்டு புதிதாக சிம்பிளான பெயர்களை வைக்க முடிவு செய்துள்ளது. டாடா பஞ்ச் காரில் தற்போது பியூர், அட்வென்ச்சர், அக்கம்ப்ளீஸ்டு, கிரியேட்டிவ், கேமோ என பெயர்களை தனித்தனியாக தெளிவாக புரியும் படி குழப்பம் இல்லாமல் வைத்துள்ளது.
இது போக கஷ்டம் பேக்களுக்கு ரிதம், டேஸில் ,ஐஆர்ஏ என தனித்தனியாக பெயர் வைத்துள்ளது. இப்படியாக பெயர் வைத்தால் கோடு பெயர் வைப்பதை விட இந்த பெயர் மக்களுக்கு எளிதாக புரியும் என்பதால் இந்த முறையை டாடா பஞ்ச் காரில் டாடா நிறுவனம் செய்து பார்த்தது நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் டாடா நெக்ஸான் காருக்கும் இப்படியான பெயர்களை வைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துவிட்டது. தற்போது டாடா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் ஆகும்போது இந்த புது பெயர்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்பு டார்க், ஜெட், காஸிரங்கா மற்றும் ரெட் டார்க் ஆகிய வேரியண்ட்களில் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரை எச்டி டிஸ்ப்ளே உடனான 360 டிகிரி கேமரா, சீகொன்ஷியல் டர்ன் இன்டிகேட்டர், முன்பக்க பார்க்கிங் செட் சென்சார் (சப் போர் மீட்டர் எஸ்யூவி செக்மெண்டில் மகேந்திரா எக்ஸ்யூவி 300 காரில் மட்டுமே இது உள்ளது), பேனரோமிக் சன் ரூஃப் ஆகியன பொருத்தப்பட உள்ளது.
அடுத்த அப்டேடாக இதில் ஹாரியர் மற்றும் சஃபாரி காரில் உள்ள அதே 10.25 டச் ஸ்கிரீன் பொருத்தப்பட உள்ளது அதே அளவில் தான் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரும் பொருத்தப்படுகிறது. இதுபோக 2 ஸ்போக் ஸ்டேரிங் வீல் இந்த காரில் இருக்கிறது. அது நடுவே கருப்பு நிறத்தில் டாடா லோகோ பதிக்கப்படுகிறது.
இதன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் வெண்டிலேட்டட் சீட்டுகள், வயர்லெஸ் சார்ஜர், ஹெச்விஏசி கண்ட்ரோல் பேனல் லெதர் அப்ஹோல்ஸரி ஆகிய இந்த காரில் இடம் பெறும். இப்படியாக கார் முற்றிலுமாக புதிய லுக்கில் மாறவுள்ளது. இந்த காருக்கான அறிமுகத்திற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போது டெஸ்ட் செய்யப்பட்டு வரும் நிலையில் இதன் மூலம் நமக்கு இந்த காரில் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஏஎம்டி கியர் பாக்ஸ் இருக்கும் நிலையில் இது புதிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸாக இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த டாடா நெக்ஸான் ஃபேஸ்ஃலிப்ட் கார் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 125 பிஎஸ் பவரையும் 225 டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தற்போது உள்ள இஞ்சின் 120 பிஎஸ் பவரையும் 170 என்எம் பார்த்திரனை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபலமான கார்களில் வேரியன்ட் பெயர்கள் மக்களுக்கு புரியும்படி எளிமையாக இருக்க வேண்டும். தற்போது மக்கள் வேரியன்ட் வாரியாக கார்களை பிரித்துப் பார்க்கும் அளவிற்கு விழிப்புணர்வை பெற்று விட்டார்கள். இதனால் புரியும் படியான பெயரை வைத்தால் மட்டுமே மக்களுக்கு அந்த கார் மீதான ஒரு அபிப்பிராயம் கிடைக்கும். அதனால் தான் டாடா நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications









