தெருவுக்கு ஒரு டாடா நெக்ஸான் காரை பார்க்கலாம் போல!! ஹூண்டாய், மாருதி கார்கள் கூட அடுத்துதான்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய காராக சமீப ஆண்டுகளாக நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி விளங்கி வருகிறது. குறிப்பாக, இந்த 2023ஆம் வருடத்தின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 87 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் விளங்குகிறது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் எஸ்யூவி கார்களுக்கான தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் செடான் கார்களை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் தங்களது அடுத்த காராக எஸ்யூவி ரக கார்களையே வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, கடந்த சில வருடங்களில் முன்னணி கார் பிராண்ட்கள் பலவற்றில் இருந்து பல்வேறு புது புது எஸ்யூவி கார்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன.

suv cars sales 2023 h1

சரி... சொல்ல விஷயத்திற்கு போவோம். இந்தியாவில் நடப்பு 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், அதாவது ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரையில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றின்படி பார்க்கும்போது, மேலே குறிப்பிடப்பட்ட 6 மாதங்களில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது.

முதன்முதலாக 2017இல் அறிமுகம் செய்யப்பட்டாலும் டாடா நெக்ஸானின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, 2021ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி காராக நெக்ஸான் விளங்கியது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி கார் எது என்பதில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

suv cars sales 2023 h1

இருப்பினும், 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாத விற்பனையை பொறுத்தவரையில், நெக்ஸான் முதலிடத்தை தனதாக்கி உள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 87,501 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 82,770 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், நெக்ஸான் கார்களின் விற்பனை ஆனது 6% அதிகரித்துள்ளது.

நெக்ஸானுக்கு அடுத்து கடந்த 6 மாதங்களில் அதிகம் விற்பனையான எஸ்யூவி காராக ஹூண்டாய் கிரெட்டா 2வது இடத்தை பிடித்துள்ளது. கிரெட்டாவின் கடந்த 6 மாத விற்பனை எண்ணிக்கை 82,566 ஆகும். ஆனால் 2022ஆம் ஆண்டில் இதே முதல் 6 மாதங்களில் 67,421 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கிரெட்டா கார்களின் விற்பனை ஆனது கிட்டத்தட்ட 22% அதிகரித்துள்ளது.

suv cars sales 2023 h1

இந்த முதல் 2 எஸ்யூவி கார்களை விட, 3வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விற்பனை ஆனது கடந்த ஆண்டை விட இந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 42%, அதாவது 25 ஆயிரம் யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஏனெனில், 2022இன் முதல் 6 மாதங்களில் வெறும் 57,751 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 82,185 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பிரெஸ்ஸா கார்களின் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் பழைய விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனையில் இருந்தது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் பிரெஸ்ஸா காரை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தான் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இவற்றிற்கு அடுத்து 4வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான பஞ்ச் உள்ளது.

suv cars sales 2023 h1

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் 67,117 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த 2022இல் 10% குறைவாக 60,932 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. டாடா பஞ்சை தொடர்ந்து 5வது இடத்தில் ஹூண்டாய் வென்யூ உள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 57,822 வென்யூ கார்கள் விற்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 62,920 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவை 5 தான் தற்போதைக்கு இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களாகும். இருப்பினும் இவற்றிற்கு அடுத்து 6வது இடத்தில் உள்ள எஸ்யூவி காரையும் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், 6வது இடத்தில் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா உள்ளது. மேற்கண்ட டாப்-5 எஸ்யூவி கார்கள் போல் அல்லாமல், கிராண்ட் விட்டாரா அளவில் பெரியது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 25, 2023, 23:43 [IST]
English summary
Tata nexon top most sold suv car in 2023 1st half
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X