நேர்டோ கிரே நிறத்திற்கு மாறிய டாடா நெக்ஸான்.. இந்த கலரை பார்த்து டாடா மோட்டார்ஸே அசந்து போயிருக்கும்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடல்களில் டாடா நெக்ஸான் (Tata Nexon)-ம் ஒன்று. இந்த கார் மாடலை பயன்படுத்தி வரும் ஓர் நபர் அந்த காரை கண்களை பறிக்கும் நேர்டோ கிரே (Nardo Grey) நிறத்திற்கு மாற்றி இருக்கின்றார்.

இந்த புதிய நிறத்தால் கூடுதல் கவர்ச்சியான காராக நெக்ஸான் மாறி இருக்கின்றது. குறிப்பாக, சாலையில் செல்லும்போது அதிக பார்வையாளர்களைப் பெறக் கூடிய வாகனமாக அது மாறி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படாத ஓர் நிற தேர்வே நேர்டோ கிரே ஆகும்.

Nexon wrapped nardo grey

குறிப்பிட்ட சில கார் உற்பத்தியாளர்கள் மட்டுமே இதுபோன்ற வித்தியாசமான நிற தேர்வுகளை வழங்குகின்றனர். அதுவும் குறிப்பிட்ட சில கார் மாடல்களுக்கு மட்டுமே இதுமாதிரியான நிற தேர்வுகள் வழங்கப்படும். இத்தகைய சிறப்புமிக்க நிறத்தையே தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் டாடா நெக்ஸானுக்கு அதன் உரிமையாளர் வழங்கி இருக்கின்றார்.

ஐரோப்பிய சந்தையில் இந்த வகை நிற காருக்கு சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கார் காதலர்கள் தங்களின் லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கே நேர்டோ கிரே நிறத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பிரீமியம் லுக்கை தங்களின் காரின் வெளிப்புறத்திற்கும் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் இதனை அவர்கள் செய்கிறார்கள்.

Tata nexon nardo grey front view

இத்தகைய தரமான நிறத்தையே இந்தியர் ஒருவர் அவருடைய நெக்ஸான் காரில் பயன்படுத்தி இருக்கின்றார். தன்னை ரசிப்பதை விரும்பாதவர்கள்கூட இந்த உலகில் இருக்க முடியும். ஆனால், தன்னுடைய காரை ஒரு நபர் ரசிக்காமல் கடந்து செல்வதை ஒருவரும் விரும்ப மாட்டார்கள். இத்தகைய மனம் கொண்டவாரகவே இந்த டாடா நெக்ஸானின் உரிமையாளர் இருக்கின்றார்.

இதன் அடிப்படையிலேயே சில மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார். அவர் பயன்படுத்தி வரும் டாடா நெக்ஸான், ஜெட் எடிசன் ஆகும். இது ஓர் லிமிடெட் வகை பதிப்பாகும். புதிய நேர்டோ கிரே நிறம் மட்டுமின்றி சில காஸ்மெட்டிக் மாற்றங்களையும் அவர் இந்த காரின் வெளிப்புறத்தில் செய்திருக்கின்றார்.

Tata nexon nardo grey side view

புதிய நிறமானது பான்னெட், முன் மற்றும் பின் பக்க பம்பர், ஃபென்டர், கதவு பேனல்கள் மற்றும் பூட் லிட் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து, பள பளக்கும் கருப்பு நிறமும் இந்த காருக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பனி மின் விளக்கு, பம்பர், பில்லர்கள் மற்றும் ரூஃப் ரெயில்களில் அது பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது நேர்டோ கிரே நிறத்தை ஹைலைட் செய்துக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இது தவிர நெக்ஸானை ரேஸ் கார் போல் தோற்றுவிக்கும் விதமாக பான்னெட்டில் கிராஃபிக்குகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Tata nexon nardo grey back side view

இத்துடன், கிளாஸ் கருப்பு நிறத்தில் ரூஃப் ஸ்பாய்லர் காரின் பின் பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. டயரிலும் வெள்ளை நிற ஸ்டிக்கர் கார்னரில் ஒட்டப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று பன்முக மாற்றங்கள் காரின் வெளிப்புறத்தை மட்டுமே சார்ந்து செய்யப்பட்டு இருக்கின்றன. உட்புறத்தில் எந்த விதமான நிற மாற்றமும் செய்யப்படவில்லை.

இதேபோல், எந்த சிறப்பு சொகுசு வசதியும் புதிதாக இந்த நெக்ஸான் காரில் சேர்க்கப்படவில்லை. இதன் வாயிலாக, இந்த காரின் உரிமையாளரின் ஒரே நோக்கம் வெளிப்புறத்தின் வாயிலாக பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பது மட்டுமே என்பது தெளிவாக தெரிகின்றது. இதற்கேற்ப இந்த கார் இப்போதே பலரைக் கவர தொடங்கிவிட்டது.

அதேவேளையில், இதுபோன்ற மாற்றங்களைச் செய்யும்போது காரின் ஆர்சி புக்கிலும் மாற்றத்திற்கான அனுமதியை பதிவு செய்திட வேண்டும். இதை செய்யாமல் வாகனம் பயன்படுத்தப்படும் எனில், அது, மோட்டார் வாகன சட்ட விதிமீறலாக கருதப்படும். இதற்கு அபராதம் அல்லது வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் பலவற்றை போக்குவரத்து காவலர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான சிக்கல்களில் சிக்காமல் இருக்க, வாகனங்களை மாடிஃபை செய்யாமல் ஒரிஜினல் நிலையில் பயன்படுத்துவதே மிக சிறந்தது ஆகும். செல்லாண் மற்றும் வாகனங்களை பறிகொடுக்காமல் இருக்கவும் இதுவே சிறந்த வழியாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 25, 2023, 8:30 [IST]
English summary
Tata nexon wrapped nardo grey shade here is video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X