டாடாவின் இந்த கார்களை இத்தன பேர் வாங்கறாங்களா! ராக்கெட்டை விட வேகமாக உயரும் விற்பனை எண்ணிக்கை!

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை (Model Wise Sales) நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் (Tata Nexon) பெற்றுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13,767 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16,887 ஆக உயர்ந்துள்ளது. இது 23 சதவீத வளர்ச்சி ஆகும். இதற்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) கார், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

2023 Tata Nexon EV

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10,982 ஆக இருந்த டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15,317 ஆக உயர்ந்துள்ளது. இது 39 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4,770 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5,984 ஆக உயர்ந்துள்ளது. இது 25 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில் டாடா டியாகோ (Tata Tiago) கார், நான்காவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

2023 Tata Nexon

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7,187 ஆக இருந்த டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5,356 ஆக குறைந்துள்ளது. இது 25 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்த பட்டியலில் டாடா ஹாரியர் (Tata Harrier) கார், 5வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2,762 ஆக இருந்த டாடா ஹாரியர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,896 ஆக குறைந்துள்ளது. இது 31 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்த பட்டியலில் டாடா டிகோர் (Tata Tigor) கார், 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 4,001 டிகோர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 1,563 ஆக குறைந்துள்ளது. இது 61 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் டாடா சஃபாரி (Tata Safari) கார், 7வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,751 ஆக இருந்த டாடா ஹாரியர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,340 ஆக குறைந்துள்ளது. இது 23 சதவீத வீழ்ச்சி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த பட்டியலில் கடைசி 4 இடத்தில் உள்ள கார்கள், விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஆனால் முதல் 3 இடத்தில் உள்ள கார்கள், விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை காப்பாற்றியுள்ளன. இதற்கு நெக்ஸான், பன்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய 3 கார்களுக்குதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நன்றி சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 23:57 [IST]
English summary
Tata october 2023 model wise sales nexon leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+