ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தது நடந்திருச்சு.. 2 காருக்குமே புக்கிங்கை ஏற்க தொடங்கிருச்சு டாடா!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களுக்கு புக்கிங் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2023 ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களுக்கே புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன.
இந்த இரண்டு கார் மாடல்களும் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்கள் என்பதால், அதிக சிறப்பம்சங்களை அதில் காண முடிகின்றது. இந்த வெர்ஷன்களுக்கே தற்போது புக்கிங் தொடங்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மற்றும் டாடா கார் விற்பனையாளர்கள் வாயிலாக இந்த காருக்கான முன் பதிவை செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 25 ஆயிரம் மட்டுமே இதற்கு செலுத்தினால் போதும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது. இரு புதுப்பிக்கப்பட்ட மாடல்களின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகுவிரைவில் இதுகுறித்த விபரங்களை நிறுவனம் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், இந்த கார்களின் டெலிவரி பணிகளும் கூடிய விரைவிலேயே தொடங்கப்பட இருக்கின்றன.
இந்த நாள் குறித்த விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இதன் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வெர்ஷன்களைக் காட்டிலும் இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்கள் வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, இரு கார்களின் முகப்பு பகுதிகளுக்கும் புதிய ஸ்டைலைக் கொடுக்கும் வகையில் அட்டகாசமான கிரில் மற்றும் பம்பர் ஆகியவைச் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. அந்த காரில் முகப்பு பகுதியில் மெல்லிய எல்இடி லைட் பகல் நேரத்தில் ஒளிரும் வகையில் வழங்கப்பட்டது.
இதைபோலவே வசதிக் கொண்ட எல்இடி லைட் சஃபாரி மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர் உள்ளிட்டவை நெக்ஸானில் இருப்பவற்றைப் போலவே தென்படுகின்றன. இந்த அம்சங்களே இந்த ஃபேஸ்லிஃப்ட் கார்களுக்கு அதிக அழகை சேர்க்கும் வகையில் இருக்கின்றன.

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்மார்ட், ப்யூர், அட்வென்சர் மற்றும் ஃபியர்லெஸ் ஆகியவையே அவை ஆகும். இதே தேர்வுகளே சஃபாரியிலும் வழங்கப்படுகின்றன. இந்த தேர்வுகளுடன் சேர்த்து அக்காம்ப்ளிஷ்டு எனும் தேர்வு கூடுதலாக வழங்கப்படுகின்றது. இதுவே சஃபாரியின் உயர்நிலை ட்ரிம் ஆகும்.
வெளிப்புற தோற்றத்தை இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்களின் உட்பக்கம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 12.30 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இந்த கார்களில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இதன் டேஷ்போர்டில் கூடுதல் அம்சமாக ஆம்பியன்ட் லைட் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சங்கள் அனைத்தும் இளம் தலைமுறையினரைக் கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை முன்னிட்டே இந்த அம்சங்களை டாடா புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களில் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, அட்டகாசமான டூ-ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஸ்டியரிங் வீலில் பிரதிபலிக்கும் டாடா லோகோ மற்றும் பன்முக கன்ட்ரோல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
கூடுதல் சிறப்பம்சங்களாக இந்த கார்களில் பவர்டு டெயில்கேட், 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஹர்மன் ஆடியோஒர்க்ஸ் பேடில் ஷிஃப்டர்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா ஆகிய அம்சங்களும் இந்த கார்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களும் இந்த கார்களில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள் இரு கார் மாடல்களின் அனைத்து வேரியண்டுகளிலும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், ஆறு ஏர் பேக்குகள் ஆப்ஷனையும் இந்த கார்களில் டாடா வழங்க இருக்கின்றது. இந்த ஏழாவது ஏர்பேக்கானது முன்பக்க இருக்கையாளர்களின் முட்டி பகுதியைப் பாதுகாக்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பம் மற்றும் பல ஏராளமான அம்சங்களை இந்த காரில் டாடா வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. எஞ்ஜினைப் பொருத்த வரை 2.0லிட்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ஒற்றை எஞ்ஜின் தேர்வில் மட்டுமே டாடா ஹாரியர் மற்றும் சஃபாரியின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எஞ்ஜின் உடன் 6ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அல்லது 6ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் இந்த இரண்டு கார்களும் ஏற்கனவே அதிக கவர்ச்சியானவையாக கருதப்பட்டன. இந்த நிலையிலேயே கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தில் அவை புதுப்பிக்கப்பட்ட மாடல்களாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இவற்றின் விலை எவ்வளவு இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக தற்போது அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









