சென்னை, மும்பைனு எல்லா நகரத்துலையும் டபுள் டெக்கர் பேருந்து ஓட போகுது.. உற்பத்தி பணியில் இறங்கும் டாடா!

இந்தியாவில் ஒரு காலத்தில் டபுள் டெக்கர் பேருந்துகள் (Double Decker Bus) அதிகளவில் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அவை முழுமையாக பன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. சென்னை மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களிலேயே ஐசிஇ எஞ்ஜின் கொண்ட டபுள் டெக்கர் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருந்தன.

ஆனால், அவை இப்போது ஒரு யூனிட்கூட இந்தியாவின் எந்த நகரத்திலும் பயன்பாட்டில் இல்லை. அதேநேரத்தில், டபுள் டெக்கர் பேருந்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மும்பை போன்ற குறிப்பிட்ட சில நகரங்களில் அவை மின்சார வெர்ஷனில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tata electric double decker bus

இருப்பினும், அவை இந்தியாவில் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையே தென்படுகின்றது. ஆனால், இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் டபுள் டெக்கர் பேருந்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா மோட்டார்ஸ் புதிய டபுள் டெக்கர் பேருந்துக்கான காப்புரிமையை இந்தியாவில் பதிவு செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tata electric bus

இதன் அடிப்படையிலேயே நிறுவனம் விரைவில் டபுள் பேருந்துகள் உற்பத்தியில் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் தயாரிக்க இருப்பது மின்சாரத்தில் இயங்கும் டபுள் டெக்கர் பேருந்துகள் ஆகும். வழக்கமான ஒற்றை தளம் கொண்ட பேருந்துகளைக் காட்டிலும் அதிக பயணிகளை டபுள் டெக்கர் பேருந்துகளில் ஏற்றிச் செல்ல முடியும்.

மேலும், இந்த ரக பேருந்தில் பயணிப்பது பலருக்கு பிடிக்கும். மொட்டை மாடியில் அமர்ந்து டிராவல் செய்கிற அனுபவத்தை இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் வழங்கும். இதனாலேயே இப்போதும் டபுள் டெக்கர் பேருந்துகளை விரும்புபவர்கள் அதிகம் இருக்கின்றனர். இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன பிரிவு ஏற்கனவே மின்சார பேருந்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

அது 9 மீட்டர் மற்றும் 12 மீட்டர் ரக எலெக்ட்ரிக் பேருந்துகளையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. அல்ட்ரா, அர்பன் மற்றும் ஸ்டார்பஸ் ஆகிய ரேஞ்ஜிகளில் மட்டுமே இந்த பேருந்துகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுதவிர ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்து ஆகிய தேர்வுகளிலும் டாடாவின் எலெக்ட்ரிக் பேருந்துகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதுதவிர வெவ்வேறு விதமான உயர தேர்வுகளிலும் டாடாவின் மின்சார பேருந்துகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டாடா விரைவில் டபுள் டெக்கர் எலெக்ட்ரிக் பேருந்துகளையும் இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் காப்புரிமை படிவம், 12-8 கிளாஸ் பேருந்தையே டாடா தயாரிக்க இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மேலும், டாடா உருவாக்க இருக்கும் இந்த எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்து நகர்புற பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இது உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்பட்சத்தில் சுவிட்ச் நிறுவனத்தின் இஐவி22 எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்துகளுக்கு போட்டியாக அமையும். இது ஓர் 9மீட்டர் பேருந்து ஆகும்.

இதையே சமீபத்தில் மும்பை நகரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனற். இதன் ஃப்ளூர் உயரம் 900 மிமீ ஆகும். இத்தகைய ஓர் பேருந்திற்கே டாடா தற்போது உற்பத்தி செய்து வரும் டபுள் டெக்கர் பேருந்து போட்டியாக அமைய இருக்கின்றது. இந்த வாகனத்தின் ரேஞ்ஜ் திறன் மற்றும் பேட்டரி பேக் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா விரைவில் தயாரிக்க இருக்கும் எலெக்ட்ரிக் பேருந்தின் முக்கிய விரங்கள் அனைத்தும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பேருந்தில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 250 kWh பேட்டரி பேக்கை எதிர்பார்க்கலாம். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை டாடாவின் டபுள் டெக்கர் பேருந்தில் நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 29, 2023, 14:30 [IST]
English summary
Tata patents electric double decker bus here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+