6 மாசத்துல வரும்ன்னு சொன்னாங்க... ஆனால் 2 மாசத்துலே கொண்டு வரப்போறாங்க! டாடா போடும் மாஸ்டர் பிளான்!

டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி காரில் ரெட் டார்க் எடிசன் காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரை அந்நிறுவனம் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் இந்தியாவில் 3வது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் தனது டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார்களின் ரெட் எடிசன் கார்களை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது இந்த கார்கள் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

6 மாசத்துல வரும்ன்னு சொன்னாங்க... ஆனால் 2 மாசத்துலே கொண்டு வரப்போறாங்க! டாடா போடும் மாஸ்டர் பிளான்!

இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த இரு கார்களையும் வரும் மார்ச் மாதமே விற்பனைக்குக் கொண்டு வரப்போவதை உறுதி செய்துள்ளது. எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்நிறுவனம் ஸ்பெஷல் எடிசன்களை வெளியிடுவது போல எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இந்த இரண்டு எஸ்யூவிகளின் ஸ்பெஷல் எடிசன்களிலும் வெளியிடவில்லை.

ஆனால் இவை இரண்டிலும் சில சிறிய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களும், உட்புறத்தில் முக்கியமான மாற்றங்களும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிறுவனம் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தும் போது இந்த 2023 மாடலில் அடாஸ் தொழிற்நுட்பத்தை அப்டேட் செய்துள்ளதாக அறிவித்தது. இதுபலருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒரு விஷயமாகும்.

இந்த அடாஸ் தொழிற்நுட்பத்தின் படி இந்த காரில் அட்டோனமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஃபார்வேர்டு கோலிஷன் அலர்ட், லேன் அசிஸ்ட், டிராஃபிக் சைன் ரெககனேஷன் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. மேலும் இந்த ரெட் டார்க் மாடலில் மொத்தம் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மிக முக்கியமான அப்டேட்டாக இருக்கிறது.

இது போக இந்த காரில் பழைய மாடலைவிட பெரியதாக 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்துடன் 9 ஸ்பீக்கர் ஜேபிஎஸ் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் முழுமையாக டிஜிட்டல் செய்யப்பட்டுள்ளது. முன்னர் செமி டிஜிட்டல் சிஸ்டம் தான் இருந்தது. இது போக இந்த காரில் 360 டிகிரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் உட்புறத்தில் புதிய "கார்னிலியன்" சிவப்பு நிற சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது குவில்டட் பேட்டர்ன் உடன் சிவப்பு லெதர் ஹேண்டில்கள், க்ரே டேஷ்போர்டு, ஸ்டியரிங் வீலில் பியானோ பிளாக் ஆக்ஸட்கள், ஆகிய கூடுதல் அப்டேட்களாக பெறப்பட்டுள்ளது. இது போக இந்த கார்களின் முன்பக்க சீட்கள் வென்டிலேட்ட் சீட்களாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் டிரைவர் சீட் எலெக்ட்ரிக் அட்ஜெட்டபுள் மற்றும் மேமரி உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன் கூடுதலாக இந்த காரில் ஆம்பியன்ட் லைட்டிங், பானரோமிக் சன்ரூஃப், ஆகிய வசதிகள் இருக்கிறது. 3 வரிசை சீட்களை கொண்ட சஃபாரி காரில் 2வது வரிசையும் வென்டிலேட்டட் சீட்களாக உள்ளன. இந்த காரில் 3 வரிசை சீட்களிலும் மோட்டாரைஸ்டு செய்யப்பட்டு சீட்களை முன்பின் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது.

இதன் வெளிப்புற விவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற நிறத்தைப் பொருத்தவரை லேசான ஷேடு மாற்றங்களுடன் ஓபிரியான் பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் பகுதியில் ஃபேயின்ட் டிங்கே பொருத்தப்பட்டுள்ளது. பிரேக் கேலிபர் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. புதிய வெர்ஷனில் 18 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த 4வது தலைமுறை ரெட் எடிசன் எஸ்யூவி கார் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் உடன் உடன் பழைய மாடலில் உள்ள அதே இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முன்னரே சொன்னது போல இந்த அப்டேட்டில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த இரு எஸ்யூவி கார்களும் மார்ச் 2023ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஹாரியர் ரெட் டார்க் எடிசன் காரின் விலை ரூ18.90 லட்சம் முதல் ரூ22.60 லட்சம் வரையிலும், சஃபாரி காரின் விலை ரூ19.78 லட்சம் முதல் ரூ23.25 லட்சம் வரையிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதியதாக வழங்கப்பட்டுள்ள சில அம்சங்கள் மற்றும் சில மாற்றங்கள் காரணமாக இந்த காரின் விலை பழைய காரை விடச் சற்று அதிகமாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Tata plans to launch harrier and safari red dark edition with adas in march 2023
Story first published: Monday, February 6, 2023, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X