நாடே காத்து கிடந்த விலை குறைவான கார் ஷோரூம்களுக்கு வர தொடங்கியது! மைலேஜில் பைக்குகளையே தூக்கி சாப்பிட்றும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று கொண்டுள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், இதன் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ப்யூர் (Pure), அட்வென்ஜர் (Adventure), அட்வென்ஜர் ரிதம் (Adventure Rhythm), அக்காம்ப்ளிஷ்டு (Accomplished) மற்றும் அக்காம்ப்ளிஷ்டு டேஷில் எஸ் (Accomplished Dazzle S) என டாடா பன்ச் சிஎன்ஜி கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். இதில் ப்யூர்தான் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும்.

Tata Punch CNG

இதன் விலை (Price) 7.10 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் அக்காம்ப்ளிஷ்டு டேஷில் எஸ் வேரியண்ட்தான், டாடா பன்ச் சிஎன்ஜி காரின் டாப் வேரியண்ட் ஆகும். இதன் விலை 9.68 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த சூழலில் இந்தியா முழுவதும் உள்ள டாடா டீலர்ஷிப்களுக்கு பன்ச் சிஎன்ஜி கார் தற்போது வர தொடங்கியுள்ளது. எனவே டாடா பன்ச் சிஎன்ஜி காரின் டெலிவரி (Delivery) பணிகள் உடனடியாக தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் சிஎன்ஜி காரை முன்பதிவு (Booking) செய்து விட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tata Punch CNG Twin Cylinder

டாடா பன்ச் சிஎன்ஜி காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் பெட்ரோல் மூலம் இயங்கும்போது அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, பவர் அவுட்புட் குறைந்து விடும்.

அதாவது சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த காரின் பவர் அவுட்புட் 72 பிஹெச்பி மற்றும் 103 என்எம் மட்டுமே. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும். பன்ச் கார் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 26.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே செயல்திறனில் சிறிய சமரசம் இருந்தாலும் கூட, சிறப்பான மைலேஜ் அதனை சரிகட்டி விடுகிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் டாடா பன்ச் சிஎன்ஜி காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் (Gearbox) வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படவில்லை.

இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி (Hyundai Exter CNG) காருக்கு நேரடி போட்டியாக, டாடா பன்ச் சிஎன்ஜி கார் களமிறக்கப்பட்டுள்ளது. ஓரளவிற்கு விலை குறைவான காராக இருந்தாலும் கூட, டாடா பன்ச் சிஎன்ஜி காரில் ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், மழை வந்தால் தானாக இயங்க கூடிய முன்பக்க வைப்பர்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இதுதவிர எல்இடி பகல் நேர விளக்குகள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், சுறா துடுப்பு ஆன்டெனா போன்ற அம்சங்களும் டாடா பன்ச் சிஎன்ஜி காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பாதுகாப்பு? என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. டாடா நிறுவனத்தின் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) பஞ்சம் இருக்குமா என்ன?

ஆல்பா (ALFA) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டாடா பன்ச் கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. எனவே இதன் சிஎன்ஜி வெர்ஷனும் பாதுகாப்பானதுதான். இதுதவிர ஏர்பேக்குகள் போன்ற தேவையான பாதுகாப்பு வசதிகளும், தீ விபத்துக்களை தடுப்பதற்கான அம்சங்களும் டாடா பன்ச் சிஎன்ஜி காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், நல்ல மைலேஜ் வழங்க கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு, டாடா பன்ச் சிஎன்ஜி சிறப்பான தேர்வாக இருக்கும். டாடா பன்ச் கார் ஏற்கனவே விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இதன் சிஎன்ஜி வெர்ஷனும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி வரும் மாதங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 11, 2023, 14:43 [IST]
English summary
Tata punch cng dealer dispatch begins price mileage features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+