27 கிமீ மைலேஜ் தரும் காரை களத்தில் இறக்கியது டாடா! விலை இவ்ளோதானா! இதுக்காகதான் எல்லாரும் வெயிட்டிங்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய கார் ஆகும். இருந்தாலும் இதன் விலை (Price) மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு, டாடா பன்ச் காரை வாங்கி வருகின்றனர். தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 ஆயிரம் பன்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது.

ஆனால் சமீப காலமாக டாடா பன்ச் காருக்கு போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. டாடா பன்ச் காருக்கு போட்டியாக மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) கார் களமிறக்கப்பட்டிருப்பதை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இத்தனைக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் டாடா பன்ச் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை என்ற ஒரு குறை இருந்து வந்தது. அந்த குறையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நிவர்த்தி செய்துள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷனை இன்று (ஆகஸ்ட் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டாடா பன்ச் சிஎன்ஜி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Variant) வெறும் 7.10 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் டாடா பன்ச் சிஎன்ஜி காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.68 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கு முன்னதாக டியாகோ (Tiago), டிகோர் (Tigor) மற்றும் அல்ட்ராஸ் (Altroz) ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது சிஎன்ஜி கார் என்ற பெருமையை பன்ச் சிஎன்ஜி பெற்றுள்ளது.
டாடா பன்ச் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது, 86 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, 73.4 ஹெச்பி பவர் மற்றும் 103 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும்.
பவர் அவுட்புட் சற்று குறைந்தாலும் கூட, சிஎன்ஜி மூலம் இயங்கும்போது சிறப்பான மைலேஜ் கிடைக்கும். டாடா பன்ச் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு சுமார் 27 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடியவர்களுக்கு இது மிகச்சிறந்த மாடலாக இருக்கும்.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், டாடா பன்ச் சிஎன்ஜி காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் (Gear Box) வழங்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற சிஎன்ஜி கார்களை போலவே, பன்ச் சிஎன்ஜி காரையும் சிஎன்ஜி மோடிலேயே நேரடியாக ஸ்டார்ட் செய்ய முடியும். இந்த வசதியை மாருதி (Maruti) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற நிறுவனங்கள் வழங்குவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் கிடைக்க கூடிய மற்றும் போதுமான அளவில் பாதுகாப்பையும் வழங்க கூடிய கார் வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு டாடா பன்ச் சிஎன்ஜி நல்ல தேர்வு. பெட்ரோல், டீசல் விலையுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி விலை மிகவும் குறைவு என்பதால், நீங்கள் தாராளமாக டாடா பன்ச் சிஎன்ஜி காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








