டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது டாடா பன்ச் சிஎன்ஜி! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் சிஎன்ஜி (Tata Punch CNG). இது ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா பன்ச் சிஎன்ஜி காரை, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் காட்சிக்கு வைத்திருந்தது.

இதை தொடர்ந்து இந்த கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக டாடா பன்ச் சிஎன்ஜி காருக்கு அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கும், டாடா பன்ச் சிஎன்ஜி கார் தற்போது வர தொடங்கியுள்ளது.

Tata Punch CNG

இவை அனைத்தும், டாடா பன்ச் சிஎன்ஜி கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதை உணர்த்துகின்றன. டாடா பன்ச் காரும், அதன் சிஎன்ஜி வெர்ஷனும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும். ஆனால் சிஎன்ஜி வெர்ஷனின் முன் மற்றும் பின் பகுதியில் சிஎன்ஜி ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களையும் வேறுபடுத்தி பார்க்க இது உதவி செய்யும்.

அதே நேரத்தில் டாடா பன்ச் சிஎன்ஜி காரில், ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் சிஎன்ஜி காரில் கொடுக்கப்பட்டிருப்பது 1.2 லிட்டர், Revotron பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

Tata Punch CNG Boot Space

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 76 பிஹெச்பி மற்றும் 95 என்எம் ஆக குறைந்து விடும். இருப்பினும் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது நல்ல மைலேஜ் (Mileage) கிடைக்கும் என்பதால், டாடா பன்ச் சிஎன்ஜி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

டிரான்ஸ்மிஷனை (Transmission) பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற பெரும்பாலான சிஎன்ஜி கார்களை போலவே, டாடா பன்ச் சிஎன்ஜி காரிலும், ஒரே ஒரு கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும்.

டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) கார் இருந்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் எக்ஸ்டர் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. எக்ஸ்டர் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டு வருவது அதன் மிகப்பெரிய ப்ளஸ்களில் ஒன்றாகும்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷனை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா பன்ச் காரை போலவே, அதன் சிஎன்ஜி வெர்ஷனும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை (Price) மிகவும் அதிகம். அத்துடன் இந்த எரிபொருட்களில் இயங்கும் கார்கள் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகின்றன. எனவே இந்திய சந்தையில் சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்களுக்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆனால் பெட்ரோல், டீசல் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி விலை மிகவும் குறைவு. மேலும் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியவை. அத்துடன் சிஎன்ஜி கார்கள், சுற்றுச்சூழலுக்கும் நட்பானவை. எனவேதான் சிஎன்ஜி கார்களை மக்கள் அதிகம் விரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நிறைய சிஎன்ஜி கார்களும், சந்தையில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 2, 2023, 23:52 [IST]
English summary
Tata punch cng reaches dealerships all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+