நடுவுல ரெண்டே நாள்தான் இருக்கு! 27கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார் தொடங்கி இன்னும் பல ஆகஸ்டுல அறிமுகமாக இருக்கு

இந்தியாவில் வர ஆகஸ்டு மாதத்தில் பலதரப்பட்ட புதிய வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, என்னென்ன கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன? என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது போன்ற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch CNG): இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்களில் டாடா பஞ்ச் கார் மாடலின் சிஎன்ஜி வெர்ஷனும் ஒன்றாகும். இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், டாடாவின் பஞ்ச் காருக்கும் சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் டாடா களமிறங்கி இருக்கின்றது.

August new car launches

ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் பலதரப்பட்ட கார் மாடல்களில் சிஎன்ஜி ஆப்ஷனை தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தனது பஞ்ச் காரிலும் சிஎன்ஜி வசதியை வழங்க இருக்கின்றது.

1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்ஜினே இந்த காரில் இடம் பெற இருக்கின்றது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றது. உச்சபட்ச மைலேஜ் திறன் கொண்ட சின்ஜி காராக இதன் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 20 கிமீ முதல் 25 கிமீ வரையில் மைலேஜை இந்த கார் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Toyota rumion

டொயோட்டா ருமியன் (Toyota Rumion): டொயோட்டா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதுமுக எம்பிவி ரக காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ருமியன் என்கிற பெயரிலேயே அதன் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அது வேறு ஒன்னும் இல்லைங்க, மாருதி சுஸுகியின் எர்டிகா காரையே டொயோட்டா ருமியன் என்கிற பெயரில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மோட்டார் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் சிஎன்ஜி வெர்ஷனே ஒரு கிலோவிற்கு 27 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

இத்தகைய மைலேஜ் திறனுடன் ருமியன் விற்பனைக்கு வரும் எனில் மாருதி சுஸுகி எர்டிகா காரோட விற்பனை மட்டுமல்ல டோயோட்டா க்ரிஸ்டாவின் விற்பனையும் பாதிப்படையும் வாய்ப்புகள் ஏற்படும். ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Hyundai creta

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்கஸார் அட்வென்சர் எடிசன்: ஹூண்டாய் நிறுவனம் அதன் இரு புகழ்பெற்ற கார் மாடல்களான கிரெட்டா மற்றும் அல்கஸார் ஆகிய இரண்டிலும் அட்வென்சர் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இவற்றின் வருகை வரும் ஆகஸ்டு மாதமே அரங்கேறிவிடும் என கூறப்படுகின்றது.

வழக்கமான கிரெட்டா மற்றும் அல்கஸார் ஆகியவற்றைக் காட்டிலும் இது மிக சூப்பரான மற்றும் அழகான ஒன்றாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது காஸ்மெட்டிக் மாற்றம் பெற்று விற்பனைக்கு வர இருக்கின்றன. கார்களின் வெளிப்புறத்தில் ரேஞ்ஜர் காக்கி நிறமும், உட்பக்கத்தில் முழுமையான கருப்பு நிறத்தாலும் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர சிறப்பு அணிகலன்கள் சிலவும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Volvo c40 recharge

வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge): இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராகும். இந்த காரையே வரும் ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த சூப்பாரன ரேஞ்ஜ் திறனுக்காக 78 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல்வேறு சூப்பரான டெக்னாலஜி வசதிகள் உடன் இந்த கார் விரைவில் இந்திய சந்தையை வந்தடைய இருக்கின்றது. இத்தகைய வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரின் வருகையே விரைவில் இந்தியாவ அரங்கேற இருக்கின்றது.

Audi q8 e tron

ஆடி க்யூ8 இ-ட்ரான் (Audi Q8 e-tron): இதுவும் ஓர் சொகுசு அம்சங்கள் நிரம்பிய எலெக்ட்ரிக் காராகும். இந்த காரின் அறிமுகம் இந்தியாவில் வரும் ஆகஸ்டு 18 ஆம் தேதி அரங்கேற இருக்கின்றது. இது ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, புதுப்பிக்கப்பட்ட கார் மாடல் ஆகும்.

காரின் முகப்பு பகுதி, பின் பக்கம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இதையே தற்போது ஆடி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இரு விதமான பேட்டரி தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. 600 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும்.

Mercedes amg glc

இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC): மெர்சிடிஸ் பென்ஸ் அதன் இரண்டாம் தலைமுறை ஜிஎல்சி எஸ்யூவி ரக காரை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுக நாள் ஆகஸ்டு 9ஆம் தேதி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஜிஎல்சி பெட்ரோல் மற்றும் ஜிஎல்சி 220 டி டீசல் என இரு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. முந்தைய தலைமுறையாக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக புதிய தலைமுறை பென்ஸ் ஜிஎல்சி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே மேலே பார்த்த அத்தனை எலெக்ட்ரிக் கார்களும் இந்தியா வந்தடைய இருக்கின்றன. இவற்றில் எது இந்தியாவில் வெற்றி காணும்? என்பது யாரும் அறியாத ஒன்றாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 29, 2023, 18:00 [IST]
English summary
Tata punch cng to toyota rumion upcoming new car launch in august 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X