டாடா பஞ்ச் சிஎன்ஜி 1 கிலோவிற்கு 27 கிமீ மைலேஜ் தருமா?.. இதுபோல அக்கார் பற்றி அறிய வேண்டிய டாப் 5 தகவல்கள் இதோ!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இன் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக பஞ்ச் (Punch) இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக காராகும். மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகும் கார் என்ற புகழுக்கு உரிய வாகனமாக இந்த பஞ்ச் இருக்கின்றது.
இந்த கார் மாடலிலேயே டாடா மோட்டார்ஸ் தற்போது சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. ஏற்கனவே, டியாகோ (Tiago), டிகோர் (Tigor) மற்றும் அல்ட்ராஸ் (Altroz) ஆகிய கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் தன்னுடைய நான்காவது சிஎன்ஜி தயாரிப்பாக பஞ்ச் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதன் பெட்ரோல் மோட்டார் கொண்ட தேர்விற்குக் கிடைப்பதைப் போலவே சிஎன்ஜி தேர்விற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா பஞ்ச் ஐசிஎன்ஜி (Tata Punch iCNG) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த கார் மாடல் பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது டாப் 5 முக்கிய தகவல்களைப் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ட்வின் சிலிண்டர் (Twin Cylinder) செட்-அப்: டாடா மோட்டார்ஸ் அதன் அல்ட்ராஸ் சிஎன்ஜி வெர்ஷனையே முதன் முதலில் ட்வின் சிலிண்டர் செட்-அப்பில் விற்பனைக்குக் களமிறக்கியது. இதைத் தொடர்ந்தே தற்போது பஞ்ச் சிஎன்ஜியையும் ட்வின் சிலிண்டர் செட்-அப் உடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, நிறுவனத்தின் பிற சிஎன்ஜி கார் மாடல்களான டியாகோ மற்றும் டிகோர் ஆகியவற்றையும் டாடா ட்வின் சிலிண்டர் செட்-அப்பிற்கு அப்கிரேட் செய்திருக்கின்றது.

அவை ஏற்கனவே விற்பனைக்கும் வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. பொதுவாக ஒற்றை சிலிண்டர் பெரிய அளவிலேயே பெரும்பாலான சிஎன்ஜி வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதுவே மிகப் பெரிய பின்னடைவாக சிஎன்ஜி கார்களுக்கு இருக்கின்றன. மிகப் பெரிய இடத்தை பூட் ஸ்பேஸில் இவையே ஆளுகை செய்வதால் அங்கு லக்கேஜ்களை வைப்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது.
இதற்கு முற்று புள்ளி வைக்கவே இரு சிறிய சிலிண்டர் செட்-அப்பை டாடா அதன் சிஎன்ஜி கார்களில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றது. ரெண்டு சிலிண்டர்களிலும் சேர்த்து 70 கிலோ வரையில் சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ள முடியும். பிற நிறுவனங்களின் சிஎன்ஜி கார்களில் இதைவிட சற்று குறைவான அளவிலேயே சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்ஜின்: டாடா மோட்டார்ஸ் பஞ்ச் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது. இது ஓர் 3 சிலிண்டர் மோட்டார் ஆகும். இந்த மோட்டாரால் 72.39 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். ஆனால், இதுவே பெட்ரோலில் இயங்கும்போது இந்த மோட்டார் 84.82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸிலேயே இந்த மோட்டார் இயங்கும்.
பாதுகாப்பு அம்சங்கள்: டாடா பஞ்ச் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் ஆகும். ஆகையால், இந்த காரில் பாதுகாப்பை நினைத்து அஞ்சத் தேவையில்லை. அதேநேரத்தில் இது ஓர் சிஎன்ஜி கார் என்பதால் பாதுகாப்பு விஷயத்தில் சற்று கூடுதல் அக்கறையை டாடா காண்பித்து இருக்கின்றது.

இதன் அடிப்படையில், மைக்ரோ ஸ்விட்ச் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது காரை ரீ-ஃப்யூவல் செய்யும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடும். இத்துடன், தெர்மல் இன்சிடன்ட் புரடக்சன் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எஞ்ஜினை தவிர வேறு எங்காவது கேஸ் கசியும் நிலை ஏற்பட்டால் இந்த சிஸ்டம் காரை உடனடியாக ஆஃப் செய்துவிடும்.
குறிப்பாக, சிஎன்ஜி சப்ளையை உடனடியாக நிறுத்திவிடும். இத்துடன், சிலிண்டர்கள் பின் பக்கத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்ற காரணத்தினால், காரின் பின் பக்கம் மிகவும் உறுதியானதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. வேறு வாகனம் வந்து மோதினாலும் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
சிறப்பம்சங்கள்: டாடா பஞ்ச் ஐசிஎன்ஜி காரில் வாய்ஸ் அசிஸ்டட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், யுஎஸ்பி டைப்-சி சார்ஜர், ஃப்ரண்ட் சீட்டுகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், சுறாவின் துடுப்பு போன்ற ஆன்டென்னா, ஆட்டோமேட்டிக் புரஜெக்டர் ஹெட்லேம்ப், 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மழை வந்தால் தானாக ஸ்வைப் செய்யும் சிஸ்டம், மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ- ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
விலை மற்றும் வேரியண்ட் விபரங்கள்: டாடா மோட்டார்ஸ் புதிய பஞ்ச் சிஎன்ஜி காருக்கு அறிமுகமாக ரூ. 7.10 லட்சம் விலை நிர்ணயித்து இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். உச்சபட்ச தேர்வின் விலை 9.68 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். ப்யூர், அட்வென்சர் மற்றும் அக்காம்ப்ளிஸ்டு ஆகியவை அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டாடா மோட்டார்ஸ் அதன் பாதுகாப்பு திறன் மிக்க கார் மாடலான பஞ்ச்சில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 27 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. ஆனால், நிறுவனம் இதை உறுதி செய்யவில்லை.


Click it and Unblock the Notifications









