டாடா பஞ்ச்-இல் சிஎன்ஜி வெர்ஷனா?.. ஷோரூம்ல கூட்டம் அலை மோதபோகுது.. டாடா கெத்து காட்டுதே...

2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் கார் மாடலின் சிஎன்ஜி வெர்ஷனை வெளியீடு செய்தது. இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக காராக பஞ்ச் இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த கார் மாடலிலேயே டாடா மோட்டார்ஸ் தற்போது பிரத்யேகமாக சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துக் கொண்ட டாடா ஒட்டுமொத்தமாக 10க்கும் மேற்பட்ட வாகன மாடல்களை காட்சிப்படுத்தியது. அவற்றில் ஒன்றே பஞ்ச் ஐ-சிஎன்ஜி.

டாடா பஞ்ச்

வரவேற்பை இரட்டிப்பாக்க சூப்பர் யுக்தி

இந்தியாவில் சிஎன்ஜி கார் மாடலுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ளும் விதமாக நிறுவனம் பஞ்ச் கார் மாடலின் சிஎன்ஜி வெர்ஷனை ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகக் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த கார் மாடல் மட்டுமில்லைங்க நிறுவனம் அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் மாடலையும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் ஊடாகவே நிறுவனம் தனது பஞ்ச் சிஎன்ஜி காரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரை நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் சமீப சில காலமாக இந்திய சாலையில் வைத்து பஞ்ச் சிஎன்ஜி காரை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தி வருகின்றது. ஆனால், இப்போதே மிக தெளிவாக பஞ்ச் சிஎன்ஜி தரிசனம் வழங்கி இருக்கின்றது. இதுவே, இந்த கார் மாடல் மிக தெளிவாகக் காட்சியளிப்பது முதல் முறை ஆகும். இந்த சிஎன்ஜி காரின் பக்கம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு சிறப்புகளை டாடா சேர்த்திருக்கின்றது.

டாடா பஞ்ச்

இந்தியாவின் முதல் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி கார்

குறிப்பாக, இந்த காரில் ட்வின் சிலிண்டர் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இந்தியாவிலேயே இரு சிலிண்டர்களுடன் உருவாக்கப்பட்ட முதல் சிஎன்ஜி கார் மாடல் இது ஆகும். ஒவ்வொரு சிலிண்டரிலும் 30 லிட்டர் வரை சிஎன்ஜியை சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பூட் பகுதியில் இரு சிலிண்டர் நிலை நிறுத்தப்பட்டுவிட்டதால் அதன் ஸ்பேஸ் முழுமையாக அடைக்கப்பட்ட நிலை தென்படுகின்றது. ஆகையால், ஸ்பேர் வீல் காரின் அடிப் பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

எஞ்ஜின் திறன்

டாடாவின் இந்த சிஎன்ஜி கார் ஐ-சிஎன்ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரே டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மோட்டார் பெட்ரோலில் இயங்கும் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதுவே, சிஎன்ஜியில் இயங்கும்போது 72 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

டாடா பஞ்ச்

டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் தேர்வு மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான பெட்ரோல் வேரியண்ட் பஞ்சைக் காட்டிலும் ரூ. 50 ஆயிரம் அல்லது 70 ஆயிரம் அதிக விலையில் விற்பனைக்குக் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த துள்ளியமான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில் கூடிய விரைவில் இதுகுறித்த தகவலை டாடாவிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 23:13 [IST]
English summary
Tata punch cng unveiled in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X