அனைத்து கண்களும் டாடாவை நோக்கி! இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் காரா! சிங்கிள் சார்ஜில் 320 கிமீ ஓடும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் வரும் அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Punch

வரும் நவம்பர் மாதம் தீபாவளி (Diwali) பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் களமிறங்கவுள்ளது. இதற்கு இன்னும் மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை நாம் கூடிய விரைவில் இந்திய சாலைகளில் பார்க்க போகிறோம்.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் ஜிப்ட்ரான் பவர்ட்ரெயின் (Ziptron Powertrain) பயன்படுத்தப்படவுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் (Range) 250 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tata Punch Front

அதே நேரத்தில் மற்றொரு பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 320 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். அதே நேரத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், சார்ஜிங் சாக்கெட்டானது, முன் பக்க பம்பரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் சார்ஜிங் சாக்கெட் வழங்கப்படும் முதல் டாடா எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பன்ச் இவி பெறலாம். இது நடைபெறும்பட்சத்தில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வது மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும் என்பதில் நமக்கு எள் அளவிற்கும் சந்தேகம் இல்லை.

அதே நேரத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படலாம். மேலும் தனித்துவமான டிசைன் கொண்ட அலாய் வீல்களையும் நாம் எதிர்பார்க்கலாம். இவை எல்லாம் தவிர டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சமிருக்காது.

இதன்படி 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் எல்லாம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீலும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய்க்கு உள்ளாக மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகியவை ஆகும்.

இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் காராக பன்ச் இவி வரவுள்ளது. மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் கருதுகிறோம். 2024ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் இவி (Hyundai Exter EV) எலெக்ட்ரிக் காருக்கு, டாடா பன்ச் இவி நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 5, 2023, 13:58 [IST]
English summary
Tata punch ev india launch before diwali all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+