இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் காரா! அடுத்த மாசம் அறிமுகமாகுது! இப்பவே ஷோரூம்ல பாயை போட்ற வேண்டியதுதான்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா பன்ச் இவி (Tata Punch EV) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு கொண்டுள்ளது. அனேகமாக அடுத்த மாதம் (அக்டோபர்) இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பேட்டரியின் ரேஞ்ச் (Range) 250 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும், மற்றொரு பேட்டரியின் ரேஞ்ச் 320 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜிப்ட்ரான் தொழில்நுட்பமும் (Ziptron Technology), பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் இடம்பெறவுள்ளது. ஆனால் டிசைனை பொறுத்தவரையில், டாடா பன்ச் காரை போலவேதான், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இருக்கும். எனினும் எலெக்ட்ரிக் வெர்ஷனை வேறுபடுத்தி காட்டும் வகையில், டிசைனில் (Design) ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், புதிய அலாய் வீல்களும், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் (Features) டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுவது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இதுதவிர டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருக்கும் அதே ஸ்டியரிங் வீல், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் நடுவே இலுமினேட்டட் டாடா லோகோ இடம்பெற்றிருக்கும். அதே நேரத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், சார்ஜிங் சாக்கெட் முன்பகுதியில் வழங்கப்பட்டிருக்கலாம்.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு சிட்ரோன் இசி3 (Citroen eC3) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். அத்துடன் அடுத்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி (Hyundai Exter EV) எலெக்ட்ரிக் காருடனும், இது போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் நிச்சயமாக வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








