டாடா பஞ்ச் காரின் இவி வெர்ஷன் எப்படி இருக்கும் தெரியுமா? ரகசிய தகவல் வெளியே கசிந்தது!

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா பஞ்ச் இவி காரின் டிசைன் மற்றும் உட்புற கட்டமைப்புகள் பல சமீபத்தில் வெளியான டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய டாடா பஞ்ச் இவி கார் எப்பொழுது விற்பனைக்கு வரும்? இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் பஞ்ச் என்ற காரை அறிமுகப்படுத்திய போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அந்த காருக்கு இருந்தது. குறிப்பாக முதன் முறையாக கார் வாங்கும் பலர் இந்த காரை வாங்க நினைத்தனர். குறைந்த விலையில் எஸ்யூவி லுக்கில் ஒரு தரமான கார் விற்பனைக்கு வருகிறது என்றால் யார் தான் விடுவார்கள். புதிய தலைமுறை கார் வாங்கும் மக்கள் எல்லாம் இந்த காரை அதிகம் விரும்பினார்கள்.

tata punch ev

இந்நிலையில் டாடா நிறுவனம் பஞ்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக பஞ்ச்.இவி என்ற காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இந்த கார் குறித்த ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த காரின் டிசைன், உட்புற கட்டமைப்புகள் எல்லாம் டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் டிசைனைப் போல கட்டமைக்கப்படும் என தெரியவந்துள்ளது.

பஞ்ச்.இவி கார் ஆல்பா எனப்படும் டாடாவின் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் சில ஸ்பை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த காரின் முன்பக்கம் தான் இந்த காருக்கான சார்ஜிங் போர்ட் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு முன்பு வந்தா டியாகோஇவி, டிகோர் இவி,நெக்ஸான் இவி போன்ற கார்களில் சார்ஜிங் போர்டுகள் அதன் பெட்ரோல் வெர்ஷன் காரில் எரிபொருள் நிரப்பும் பகுதியில் தான் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னரே சொன்னதுபடி நெக்ஸான் காரில் உள்ள பல டிசைன் அம்சங்கள் இந்த பஞ்ச்.இவி காரிலிருக்கிறது. முக்கியமாக இதன் முன்பக்க கிரில் பகுதி மூடப்பட்ட கீழ் பகுதியாக இருக்கிறது. முன்பக்கம் நீளமான எல்இடி லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜின் காரில் உள்ள அதே ஹெட்லைட் மட்டும் எல்இடி டேடைம் ரன்னிங் லைட் ஆகியன பானட்டிற்கு கீழே பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கத்திலும் அதேபோல டெயில் லைட் பெட்ரோல் காரில் அதே டிசைனில் தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறம் பெரிய பிளோடிங் டச் ஸ்கிரீன் இன்போ டைன்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்பளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் அம்சத்துடன் இருக்கிறது. மற்றும் இந்த கார் கனெக்டர் கார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரில் மிக முக்கிய அம்சமாக ப்ரீமியம் இரண்டு ஸ்போக் பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வில் இலுமினேட்டர் லோகோவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா சிஸ்டம், கெபாசிட்டி எச்விஏசி கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கண்ட்ரோல் புதிய கீயர் லிவர் செலெக்டர் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.

இந்த பஞ்ச்.இவி கார் ஸிட்ரான் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் பல வேரியன்ட்கள் இருக்கும் என்றும், இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கும் என்றும் தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜில் 350 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டியாகோ இவி, டிகோர் இவி கார்களை விட சற்று பிரிமியர் வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பஞ்ச் கார் ஏற்கனவே இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. மாதம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி வரும் நிலையில் இதன் இவி வெர்ஷன் வெளியானால் நிச்சயம் இது மார்க்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் பஞ்ச்.இவி காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இவி மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட உள்ளது. பஞ்ச் கார் மற்ற கார்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மக்களை தன்வசம் இழுத்ததோ அதே போல பஞ்ச்.இவி காரும் இவி கார் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 28, 2023, 16:29 [IST]
English summary
Tata punch ev may equipped with nexon facelift like front end styling know details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+