புதிய டாடா எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்ல இப்பவே பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!
இந்திய சந்தையில் நம்பர்-1 எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.
அவை டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகியவை ஆகும். இதில், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அவை டாடா நெக்ஸான் இவி ப்ரைம் (Tata Nexon EV Prime) மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) ஆகியவை ஆகும். இதை தொடர்ந்து டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) மற்றும் டாடா பன்ச் இவி (Tata Punch EV) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது.
இதில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் சாலையில் வலம் வந்தபோது கேமரா கண்களில் சிக்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் உருவத்தை மறைத்திருந்தது. இருப்பினும் ரஷ்லேன் தளம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலமாக, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய ஒரு சில முக்கியமான தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன.

தற்போது விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவேதான், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரும் இருக்கிறது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், வீல் ஆர்ச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பின் பக்க டோர் ஹேண்டில்கள், 'C' பில்லர்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் இருப்பதை போன்ற க்ரில் அமைப்பு, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில் புதிய டிசைன் (Design) உடன் கூடிய அலாய் வீல்களும் கொடுக்கப்படலாம்.
இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், தட்டையான அடிப்பாகம் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் இடம்பெற்றிருந்தது. இதுதவிர 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் (Features) டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம்.
மேலும் 360 டிகிரி கேமரா மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய வசதிகளும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி (Battery) ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இதில், ஒரு பேட்டரியின் ரேஞ்ச் (Range) சுமார் 250 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும், மற்றொரு பேட்டரியின் ரேஞ்ச் 300 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருக்கலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 8-9 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் நிறைவான ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








