சாலையில் தென்பட்ட மர்ம கார்! இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! மார்க்கெட்டையே தலைகீழா புரட்டி போட போகுது!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில், நம்பர்-1 இடத்தில் உள்ள நிறுவனம் எது? என கேட்டால், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) என பச்சை குழந்தை கூட சரியாக கூறி விடும். அந்த அளவிற்கு யாராலும் அசைக்க முடியாத இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் வலுவாக உள்ளது.
தற்போதைய நிலையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) என மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களையும் டாடா மோட்டார்ஸ் களமிறக்கவுள்ளது.

இதில், டாடா பன்ச் இவி (Tata Punch EV) மிகவும் முக்கியமானது. இந்தியாவில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இந்திய சாலைகளில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் தற்போது மிகவும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் ஒன்றில் டாடா பன்ச் இவி நிறுத்தப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் (Spy Pictures) தற்போது வைரலாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் மூலம், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் சார்ஜிங் போர்ட், க்ரில் அமைப்பிற்கு கீழே முன் பக்க பம்பரில் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், வீல் ஆர்ச்சுகள், க்ளாடிங் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றை நம்மால் பார்க்க முடிகிறது. பின் பகுதியில், ரூஃப் ஸ்பாய்லர், ஸ்டாப் லேம்ப், வைப்பர் மற்றும் எல்இடி டெயில்லைட்களை காணலாம்.
செயல்திறனை பொறுத்தவரையில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 250 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும், மற்றொரு பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 320 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருக்கலாம்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார், மிகவும் குறைவான விலையில்தான் (Price) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை பொறுத்தவரையில், இது ஓரளவிற்கு குறைவான விலைதான் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் ஐசி இன்ஜின் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கியுள்ளது. எனவே டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரும், மிகவும் பாதுகாப்பான ஒன்றாகவே இருக்கும்.
அத்துடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகளும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ளன. எனவே 10-13 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா பன்ச் இவி பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஹூண்டாய் எக்ஸ்டர் இவி (Hyundai Exter EV) எலெக்ட்ரிக் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








