டாடா களமிறக்க போகும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்ல ஈ மாதிரி கூட்டம் மொய்க்க போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதை உறுதிபடுத்தும் வகையில், டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் லாரி ஒன்றில் வைத்து டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டு செல்லப்பட்டுள்ளது. Photulogy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Tata Punch

இது டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்பதை, பல்வேறு அம்சங்கள் மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகின்றன. டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில், முன் பகுதியில் மட்டுமே டிஸ்க் பிரேக்குகள் இருக்கும். ஆனால் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் பின் சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இருக்கின்றன.

அதிக எடையுள்ள பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என்பதால், அவற்றை கையாள்வதற்காக கூடுதல் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கலாம். அத்துடன் லாரியில் கொண்டு செல்லப்பட்ட டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், வழக்கமான எக்ஸாஸ்ட் சிஸ்டம் இல்லை. இது எலெக்ட்ரிக் கார்தான் என்பதற்கு இது மற்றொரு சாட்சியாக கருதப்படுகிறது.

Tata Punch Front Profile

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், 24 kWh மற்றும் 19.2 kWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 24 kWh பேட்டரியின் ரேஞ்ச் (Range) 315 கிலோ மீட்டர்கள் ஆகவும், 19.2 kWh பேட்டரியின் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் ஆகவும் இருக்கலாம். இதே பேட்டரிகள்தான், டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அதே நேரத்தில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் ஆகிய வசதிகள் (Features) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Punch EV Spied In India

அனேகமாக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 8 அல்லது 9 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலில் பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அதற்கு பிறகுதான், டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. எனினும் நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்கள் வந்த பிறகு, டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை கிடுகிடுவென உயரலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த பெருமையை தக்க வைத்து கொள்வதற்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் உதவலாம். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதுதான் இதற்கு காரணம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 15, 2023, 22:46 [IST]
English summary
Tata punch ev spied in india expected price range features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X