சாலையில் சுற்றி திரிந்த மர்ம கார்! இந்தியாவே இதுக்காகதான் வெயிட்டிங்! இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இது டாடா களமிறக்கவுள்ள 4வது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

வரும் நவம்பர் மாதம், அதாவது அடுத்த மாதம், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாவிட்டால், 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும்.

Tata Punch EV Spied

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் தீவிரமாக சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட பல்வேறு ஸ்பை படங்கள் (Spy Photos) வெளியாகி, இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. இந்த வரிசையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ (Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வைரல் ஆக பரவி வரும் இந்த வீடியோவில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்ட மாடலில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஒன்றை நம்மால் பார்க்க முடிகிறது. சென்டர் கன்சோலின் மைய பகுதியில் இந்த டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கம்பீரமாக வீற்றுள்ளது.

அனேகமாக இது 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா பன்ச் ஐசி இன்ஜின் (IC Engine) காரின், எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இருப்பினும் இந்த 2 மாடல்களுக்கும் இடையே நிறைய டிசைன் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் முன் பகுதியில் நிறைய மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன்படி புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய பம்பர் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காருக்கான சார்ஜிங் போர்ட்டும் முன் பகுதியில்தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர உட்புறத்தில் புதிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் ஒளிரக்கூடிய டாடா லோகோ இடம்பெறலாம். ஆனால் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரி (Battery) குறித்த தகவல்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் (Range) 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கலாம். எனவே டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் இவி வருகைக்கு பின், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கை மேலும் ஓங்க போகிறது என்பது உறுதி. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக இருந்தாலும் கூட, இதன் ஆரம்ப விலை வெறும் 9 அல்லது 9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 22, 2023, 23:46 [IST]
English summary
Tata punch ev spied once again before november launch new details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+