இந்த காருக்காக தான் மரண வெயிட்டிங்! டாடா-ன்னா யாருன்னு காமிக்குற நேரம் வந்துருச்சு... டாடா பஞ்ச் இவி தரிசனம்!
டாடா பஞ்ச் இவி கார் முன் முறையாக டெஸ்டிங் கொண்டு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகியுள்ள நிலையில் இந்த கார் டெஸ்டிங்கில் ஈடுபடும் செய்தி வைரலாக பரவி வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்கெட்டில் மிகப்பெரிய மார்கெட் பங்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் வைத்திருக்கிறது. இந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி, டியாகோ இவி எனப் பல எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது.

இந்நிறுவனம் வரிசையாகத் தனது பெட்ரோல் கார்களின் இவி வெர்ஷன்களை அறிமுகப்படுத்தி ஹிட்டாக்கி வருகிறது. இதற்கிடையில் அடிப்படையிலிருந்தே இவி காரை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இப்படியாக பெட்ரோல் காரிலிருந்து இவி காராக மாறுவதில் மக்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருப்பது பஞ்ச் இவி கார் தான்.
இந்த கார் அறிமுகத்தின் போதே மிகப்பெரிய அளவு வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை இந்த காரின் விற்பனை மிக அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பஞ்ச் கார்கள் விற்பனையாகி வருகிறது. மக்களின் நன்மதிப்பை பெற்ற இந்த காரின் இவி வெர்ஷன் என்றால் எதிர்பார்ப்பு இருக்காதா என்ன?

இந்த கார் தற்போது டெஸ்ட்கிற்காக கொண்டு செல்லப்படும் போது சில நெட்டிசன்கள் கண்ணில்பட்டுள்ளது. அவர்கள் இந்த காரை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் போட்டு வைரலாக்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை வைத்த நமக்கு இந்த கார் குறித்த பல முக்கியமான தகவல்கள் எல்லாம் தெரிய வருகிறது. இதைப் பற்றி வரிசையாகக் காணலாம்.
பொதுவாக ஒரு பெட்ரோல் காரை இவி காராக மாற்றும் போது டாடா நிறுவனம் அதன் வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்களை எல்லாம் செய்யாமல் ஆங்காங்கே நீல நிற ஆக்ஸென்ட்களை மட்டும் வழங்குவார்கள். அதே போலத் தான் இந்த காரின் வெளிப்புற தோற்றத்திலும் பஞ்ச் இவி பெட்ரோல் காரிலிருந்து மாற்றம் எதுவும் பெரிய அளவில் இல்லை. இதன் வீல்கள் ஆரோ வீல்களாக வழங்கப்பட்டுள்ளன. இதே வீல் தான் டியாகோ மற்றும் டிகோர் இவி காரில் இருந்தது.

இந்த காரின் பெட்ரோல் டேங்க் ஃப்யூயல் லிட் பகுதியில் சார்ஜிங் போடும் பகுதியாக வழங்கப்பட்டுள்ளது. கவனிக்கத்தக்க மாற்றம் என்றால் இந்த பஞ்ச் இவி காரில் பின்பக்க வீலில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது, பெட்ரோல் காரில் டிரம் பிரேக் தான் வழங்கப்படும். இந்த காரின் உட்புறத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ரோட்டரி டயல் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் அம்சம் இருப்பது தெரிகிறது.
இது போக இந்த காரில் ஆட்டோ ஹேண்டு, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் மேலும் சில எலெக்ட்ரிக்கல் அம்சங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இதன் டேஷ்போர்டில் அதே ஹார்மேன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பஞ்ச் இவி காரின் மோட்டார் குறித்த விபரங்கள் இல்லை. டியாகோ இவி காரில் உள்ள அதே மோட்டாரை தான் இதிலும் எதிர்பார்க்கலாம். இது 74 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டியாகோ இவி கார் மொத்தம் சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவ் மோட்களில் விற்பனைக்கு வருகிறது.
டாடா பஞ்ச் இவி கார் செக்மெண்டில் ஏற்கனவே சிட்ரோன் இசி3 கார் விற்பனையாகி வரகுிறது. இந்த கார் ரூ11.5 லட்சம் முதல் ரூ12.43 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. டாடா காரும் கிட்டத்தட்ட இதே விலைக்கு அதன் காரை தயாரிக்க வேண்டும். இந்த இரண்டு காரும் மார்கெட்டில் கடும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். டாடா பஞ்ச் இவி காரின் அறிமுகம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 2024ம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக ஹாரியர் இவி, கர்வ் இவி ஆகிய கார்கள் டாடாவின் இவி பட்டியலில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் மக்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார். இந்த காரின் வருகைக்காக ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கின்றனர். தற்போது எலெக்ட்ரிக் கார்களின் டிரெண்ட் என்பதால் இந்த கார் மார்கெட்டில் வந்தால் பெட்ரோல் காரில் செய்ததைப்போல் எலெக்ட்ரிக் கார் விற்பனையிலும் ஒரு புரட்சியையே ஏற்படுத்திவிடும்.
Image Courtesy: Photulogy/Instagram


Click it and Unblock the Notifications









