டாடா பஞ்ச் இவி காரின் விலை இவ்வளவு கம்மியா! அறிமுக தேதி குறித்த தகவல் வெளியானது!
டாடா நிறுவனத்தின் பஞ்ச் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த கார் வரும் ஜனவரி மாத கடைசி வாரத்தில் அறிமுகமாகும் என நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் எந்த காருக்கு போட்டியாக வருகிறது. இதன் விலை என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்காக தனி பிராண்டை டாடா.இவி என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. இந்த பிராண்டில் தான் இனி டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிராண்டின் கீழ் அடுத்த முக்கிய அறிமுகமாக டாடா பஞ்ச்.இவி கார் இருக்கும் என மக்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை எப்பொழுது இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் டாடா பஞ்ச்.இவி கார் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டாடா நிறுவனம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. பல்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்கள் மூலம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
டாடா பஞ்ச் டிவி கார் என்பது மார்க்கெட்டில் தற்போது சிட்ரோன் என்ற காருக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் இசி3 காரை பொறுத்தவரை ரூ11.61 லட்சம் முதல் ரூ12.79 லட்சம் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. டாடா பஞ்ச் கார் இதைவிட குறைவான விலையில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

டாடா நிறுவனம் பஞ்ச்விகாரின் அம்சங்கள் குறித்த எந்த தகவலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் நாம் இந்த காரில் 24 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதே தான் டிகோர் மற்றும் டியாகோ ஆகிய இவி கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஏஆர்ஏஐ சான்று படி 350 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் பஞ்ச் காரரை விட சற்று கூடுதல் அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எல்இடி ஹெட்லைட் அனைத்து வீல்களுக்குமான டிஸ்க் பிரேக் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டேரிங் வீல் அதில் டாடா லோகோ இலுமினேட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் நெக்ஸான் காரில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கார் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் தான் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தினத்தை ஒட்டி இந்த கார் அறிமுகமாக எனது நிலையில் அப்பொழுது இந்த காருக்கான புக்கிங் துவங்கப்படும் எனவும் டெலிவரி மார்ச் மாதத்திற்கு முன்பே துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டிற்குள் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
டியாகோ இவி என்ற கார் குறைவான விலையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. அதற்கு அடுத்த கொஞ்சம் கூடுதல் விலையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் 9 லட்சம் என்ற விலையில் இந்த கார் அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
பஞ்ச் கார் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்திய மக்களுக்கு இந்த கார் மிகவும் பிடித்து போய்விட்டதால் பலர் இந்த காரை இஷ்டப்பட்டு புக் செய்து வாங்குகின்றனர். இந்த கார் எலெக்ட்ரிக் வெர்ஷனில் வரும்போதும் இன்னும் கூடுதல் வரவேற்பை பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் காரை விரும்பும் மக்கள் இந்த காரை அதிகமாக தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அறிமுகமாகும் போதே மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கார் விற்பனைக்கு வந்தவுடன் மிகச் சிறப்பான விற்பனையை பெற்று தற்போது டாடா நிறுவனத்தில் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இந்த பஞ்ச் கார் இருக்கிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









