கண்ணீருடன் விடைபெற்றது! பிரபலமான டாடா காரின் விற்பனை நிறுத்தம்! திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்கள் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து கொண்டே வருகின்றன. இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிரடியான காரியம் ஒன்றை செய்து வருகிறது. தனது பிரபலமான கார்களில் புதிய வேரியண்ட்களை சேர்ப்பது மற்றும் ஏற்கனவே உள்ள ஒரு சில வேரியண்ட்களை நீக்குவதுதான் அந்த அதிரடியான காரியம்.

இதன்படி டாடா நெக்ஸான் (Tata Nexon) காரின் வேரியண்ட்கள் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டன. அதை தொடர்ந்து டாடா நெக்ஸான் காரின் சிறிய உடன்பிறப்பான பன்ச் (Tata Punch) காரின் ஸ்பெஷல் எடிசன் ஒன்று தற்போது நீக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் காரின் காஸிரங்கா எடிசன்தான் (Kaziranga Edition) தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. எனவே டாடா பன்ச் காஸிரங்கா எடிசனின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணீருடன் விடைபெற்றது! பிரபலமான டாடா காரின் விற்பனை நிறுத்தம்! திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

அது என்ன காஸிரங்கா எடிசன்?

காஸிரங்கா எடிசன் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா பன்ச் காரின் க்ரியேட்டிவ் வேரியண்ட்டின் அடிப்படையில் காஸிரங்கா எடிசன் உருவாக்கப்பட்டிருந்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் காஸிரங்கா தேசிய பூங்கா இருக்கிறது. இங்குள்ள ஒற்றை கொம்பு இந்திய காண்டாமிருகங்கள் மிகவும் பிரபலம். இதை மனதில் வைத்துதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காஸிரங்கா எடிசனை உருவாக்கியிருந்தது.

முன்னாடியே வாங்காம விட்டுட்டோமே!

டாடா பன்ச் காஸிரங்கா எடிசனில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக 85 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் இந்த இன்ஜின் செய்யப்பட்டிருந்தது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது. டாடா பன்ச் காரின் காஸிரங்கா எடிசன் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டிருப்பது, அதனை வாங்கலாம் என நினைத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீருடன் விடைபெற்றது! பிரபலமான டாடா காரின் விற்பனை நிறுத்தம்! திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கவலையை விடுங்க!

டாடா பன்ச் காரின் காஸிரங்கா எடிசன் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தாலும் கூடிய விரைவில், 2 புதிய மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இதில் ஒன்று சிஎன்ஜி (CNG) ஆகும். மற்றொன்று எலெக்ட்ரிக் (Electric). ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் சிஎன்ஜி (Tata Punch CNG) மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை (Tata Punch EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், சிஎன்ஜி வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா பன்ச் காரானது, இந்தியாவில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும். அதிகமாக விற்பனையாக கூடிய டாடா கார்களில் ஒன்றாக பன்ச் திகழ்ந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களின் வருகைக்கு பிறகு, டாடா பன்ச் காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

சம்பவம் செய்ய போகும் டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV), டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) என மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இதில், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் வெகு சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. இந்த வரிசையில் நான்காவதாக வரவுள்ள பன்ச் எலெக்ட்ரிக் காரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பன்ச் காருக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு அதன் குறைவான விலையும் (Price)முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் வெறும் 9.54 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரும் ஓரளவிற்கு குறைவான விலையில்தான் விற்பனைக்கு வரும் என கருதப்படுகிறது.

Article Published On: Thursday, February 9, 2023, 17:04 [IST]
English summary
Tata punch kaziranga edition discontinued in india details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+