27 கிமீ மைலேஜை வாரி வழங்கும் காரின் விலை இவ்ளோதானா! டாடா ஷோரூம்கள்ல ஜே ஜே-ன்னு கூட்டம் அலை மோதுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). குறைவான விலை (Price), அதிக மைலேஜ் (Mileage) மற்றும் பாதுகாப்பு (Safety) உள்ளிட்ட காரணங்களால், ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா பன்ச் பதிவு செய்து வருகிறது.
இந்த வரிசையில் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதமும் டாடா பன்ச் கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் 12,131 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,383 ஆக உயர்ந்துள்ளது.

இது 19 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டாடா பன்ச் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 87 பிஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி வெர்ஷன்களின் பவர் அவுட்புட் 73 பிஹெச்பி மற்றும் 103 என்எம் மட்டுமே. அதேபோல் சிஎன்ஜி வெர்ஷன்களில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
ஆனால் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்கள் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான மைலேஜ் என்பதுடன், டாடா பன்ச் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Rating) பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற காரணங்களால்தான், இந்திய சந்தையில் டாடா பன்ச் கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுடன், டாடா பன்ச் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் மாதங்களில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகைக்கு பின்னர், இந்திய சந்தையில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








