டாடாவுக்கு சங்கு ஊத போகும் ஹூண்டாய் கார்! விலை இவ்ளோதானா! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ரெடி ஆயிருவீங்க!

இந்திய சந்தையில் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக அளவில் சிறிய மற்றும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி ரக கார்கள்தான் இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கின்றன. டாடா பன்ச் (Tata Punch) இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச், தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. எனவே டாடா பன்ச் காருக்கு போட்டியாக மைக்ரோ எஸ்யூவி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் பல்வேறு நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

டாடாவுக்கு சங்கு ஊத போகும் ஹூண்டாய் கார்! விலை இவ்ளோதானா! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ரெடி ஆயிருவீங்க!

இதில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் ஒன்று. ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மிக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. Ai3 என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இந்த கார் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். இந்த புதிய காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது தீவிரமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. தென் கொரியா சாலைகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது இந்த புதிய கார் சமீபத்தில் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த கார் வெகு விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவுக்கு சங்கு ஊத போகும் ஹூண்டாய் கார்! விலை இவ்ளோதானா! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ரெடி ஆயிருவீங்க!

அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் இந்த கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) காரின் அப்டேட் செய்யப்பட்ட பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு டாடா பன்ச் காருடன், இந்த புதிய கார் நேரடியாக மோதும். இதுதவிர ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கும் இது விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைக்கான ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரில், மிகவும் பிரபலமான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் என ஏராளமான வசதிகளை இந்த புதிய கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்களுடன் கூடிய ஸ்டியரிங் வீல் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

இப்படி வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ள இந்த புதிய காரின் விலையும் (Price) அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவேதான் இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Tuesday, February 28, 2023, 11:03 [IST]
English summary
Tata punch rival hyundai micro suv india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+