27 கிமீ மைலேஜ் தரும் டாடா காரின் விலை இவ்ளோதானா! வாங்கறதுக்கு எல்லாரும் வரிசையில நிக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சமீப காலமாக அதிகம் விற்பனையாகும் டாடா கார்களில் ஒன்றாக பன்ச் இருந்து வருகிறது.

ப்யூர் (Pure), அட்வென்ஜர் (Adventure), அக்காம்ப்ளீஸ்டு (Accomplished) மற்றும் க்ரியேட்டிவ் (Creative) என டாடா பன்ச் கார் மொத்தம் 4 ட்ரிம்களில் (Trim) விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Tata Punch iCNG

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில், டாடா பன்ச் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாடா பன்ச் காரின் பெட்ரோல் வெர்ஷன்களில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சிஎன்ஜி வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பதும் இதே இன்ஜின்தான். ஆனால் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது, இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 84 பிஹெச்பி ஆகவும், 113 என்எம் டார்க் ஆகவும் இருக்கும். மறுபக்கம் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 72 பிஹெச்பி மற்றும் 103 என்எம் டார்க் ஆக மட்டுமே இருக்கும்.

Tata Punch

பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது. பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் சந்தேகம் இல்லை.

இதன் காரணமாக டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களை வாங்குவதற்கு மக்கள் பலரும் போட்டி போட்டு கொண்டுள்ளனர். இது டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களுக்கான காத்திருப்பு காலத்தில் (Waiting Period) எதிரொலிக்கிறது. நடப்பு நவம்பர் மாதத்தில் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களுக்கான காத்திருப்பு காலம் 3 முதல் 12 வாரங்களாக உள்ளது.

அதாவது முன்பதிவு செய்த நாளில் இருந்து நீங்கள் 3 முதல் 12 வாரங்கள் வரை காத்திருந்தால் மட்டுமே டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களை டெலிவரி பெற முடியும். மறுபக்கம் பெட்ரோல் வெர்ஷன்களுக்கான காத்திருப்பு காலம் வெறும் 3 முதல் 4 வாரங்களாக மட்டுமே இருக்கிறது. சிஎன்ஜி வெர்ஷன்களுக்கான தேவை அதிகமாக இருப்பதை இந்த எண்கள் நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களை தேர்வு செய்யலாம். முன்பெல்லாம் சிஎன்ஜி பங்க்குகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்தன. ஆனால் தற்போது சிஎன்ஜி பங்க்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 24, 2023, 21:52 [IST]
English summary
Tata punch waiting period november 2023 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+