ஏணி வச்சா கூட எட்டாத உயரத்துக்குச் சென்ற டாடா, மாருதிலாம் இந்த விஷயத்துல ஒன்னுமே கிடையாது!

ஒரே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக இவிகளை விற்பனை செய்து டாடா நிறுவனம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத இவி விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் இவி கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறது. தன் போட்டி நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையிலிருந்து பல மடங்கு அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தனது ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி டாடா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

Tata EV sales April 2023

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் டாடா நிறுவனம் மொத்தம் 6,516 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் 6,506 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவரை ஒரே மாதத்தில் அதிகமாக நடந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை இது தான். கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடும் போது 179 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 2,333 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த அதீத விற்பனை வளர்ச்சிக்குக் காரணம் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய டியாகோ இவி கார் தான். தற்போது டாடா நிறுவனத்திடம் மொத்தம் 3 இவி கார்கள் இருக்கிறது. டாடா நெக்ஸான் இவி, டாடா டிகோர் இவி, மற்றும் டாடா டியாகோ இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

டாடா டியாகோ இவி இந்தியாவில் குறைந்த விலை இவி கார்களில் ஒன்று. இந்த கார் ரூ8.69 லட்சம் முதல் ரூ11.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் தான் கடந்த ஏப்ரல் மாதம் விரை விலை குறைவான காராக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் அறிமுகமான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கோமெட் இவி கார் ரூ.7.98 லட்சம் என்ற விலைக்கு அறிமுகமாகிவிட்டது. டாடா டியாகோ இவியை விடக் குறைவான விலையில் விற்பனையாகும் ஒரே இவி இது தான்.

டாடா டியாகோ இவி காரை பொருத்தவரை 2 விதமான பேட்டரி பேக் இருக்கிறது. சின்ன பேட்டரி 250 கி.மீ ரேஞ்சும் பெரிய பேட்டரி 315 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. இந்த கார் 74 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 5.7 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இந்த கார் 10-80 சதவீத சார்ஜை வெறும் 57 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிடுகிறது.

அடுத்ததாக நெக்ஸான் இவி கார், மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்த கார் இது. இந்த இவி காரில் இவி மேக்ஸ், இவி ப்ரைம், மற்றும் டார்க் எடிசன் வெர்ஷன் ஆகியவை உள்ளன. டிகோர் இவி காரை பொருத்தவரை இது 308 கி.மீ ரேஞ்ச் தரக்கூடியது. இந்தியாவில் இந்த செக்மெண்டில் விற்பனையாகும் ஒரே இவி கார் இது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தரமான கார்களை தயாரித்து மார்கெட்டில் இறக்குவதால் இந்த கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. ஏராளமான மக்கள் இந்நிறுவனத்தின் கார்களை வாங்கி வருகின்றனர். தரமான கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு இதை விடச் சிறந்த சான்று தேவையில்லை. இந்தியா தரமான கார்களுக்கான மார்கெட்டாக மாறி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 2, 2023, 9:27 [IST]
English summary
Tata recorded highest electric car sales in april 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+