ஓனர் வேணும்னே செய்த காரியத்தால் எரிந்த முக்கிய பாகம்.. இலவசமாக மாற்றி தந்த டாடா! சின்ன ஆட்சேபனைகூட தெரிவிக்கல!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மாடல்களில் டாடா நிறுவனத்தின் ஹாரியர்-ம் ஒன்று. இந்த கார் மாடலை பயன்படுத்தி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், அந்த காரின் வேகத்தை கூட்ட வேண்டும் என்ற நோக்கில், அதில் இசியூ ரீ-மேப் (ECU Remap) செய்திருக்கின்றார்.

காரின் செயல்திறனை மேம்படுத்த காணப்படும் மிகவும் எளிமையான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இது எந்த அளவிற்கு எளிமையானதோ அந்த அளவிற்கு ஆபத்தானதும்கூட. இசியூ ரீ-மேப்பில் ஏற்படும் சின்ன கோளாறுகூட காரை முழுமையாக வேலை செய்யாமல் போக செய்துவிடும். இத்தகைய சிக்கலையே டாடா ஹாரியர் சந்தித்திருக்கின்றது.

ஹாரியர்

இந்த சிக்கலை டாடா மோட்டார்ஸ் இலவச வாரண்டி திட்டத்தின்கீழ் சரி செய்து கொடுத்திருக்கின்றது. டாடாவின் இந்த செயல் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. "சர்வீஸ் மையங்கள் தங்கள் செய்யும் தவறால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்துக் கொடுக்கவே மூக்கால் அழுகின்ற சம்பவங்களைக் கண்ட இந்தியர்களுக்கு, டாடாவின் இந்த செயல் ஆச்சரியமாக இருக்காமல் வேறு எப்படி இருக்கும்" என நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 'ஆர்சி ட்யூன்ஸ்' எனும் நிறுவனத்தின் வாயிலாகவே ஹாரியரை இசியூ ரீமேப் செய்திருக்கின்றார். இந்த செயலுக்கு பின்னரே டாடா ஹாரியர் சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக மணிக்கு 25 கிமீ வேகத்தைத் தொடவே அந்த கார் முக்கியதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

ஹாரியர்

ஸ்போர்ட் மற்றும் ஈகோ என எந்த மோடிற்கு மாற்றினாலும் ஹாரியரின் வேகம் மாறவில்லை என கூறப்படுகின்றது. இந்த மோட்கள் வேலை செய்யவில்லை என்றே கூறலாம். ட்யூன் அப்பிற்காக கார் ஒப்படைக்கப்பட்டபோது அந்த காரில் 22 க்கும் மேற்பட்ட கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

இசியூ, ஏபிஎஸ், டெர்ரயின் சிஸ்டம் மற்றும் பெப்ஸ் உள்ளிட்டவற்றில் சிக்கல் இருப்பதாக ஆர்சி ட்யூன்ஸ் சென்டர் தெரிவித்திருக்கின்றது. இந்த சிக்கல்களுடன் ட்யூன் அப் செய்தால் அது மேலும் சிக்கலை மோசமானதாக்கிவிடும் என கூறி அவற்றை சரி செய்துவிட்டு வரும்படி கார் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

ஹாரியர்

Source: Team BHP

அன்றைய தினமே டாடா சர்வீஸ் மையத்தை நாடிய ஹாரியர் உரிமையாளர் இதுகுறித்து சர்வீஸ் மைய ஊழியர்களிடத்தில் தெரிவித்திருக்கின்றார். அங்கு அனைத்து கோளாறுகளு சரி செய்யப்பட்டு விட்டதாகக் கூறி கார் மீண்டும் உரிமையாளரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே மீண்டும் ஆர்சி ட்யூன்ஸ் இடம் இசியூ ரீமேப்பிற்காக ஹாரியர் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த முறையும் ஓபிடி-II உடன் ட்யூன்-அப் செய்யும் கருவி இணைக்கப்பட்ட போது, அதே பழைய சிக்கல்கள் அப்படியே ஹாரியரில் இருப்பதாக ட்யூன்-அப் மையத்தைச் சேர்ந்தவர் கண்டறிந்திருக்கின்றார். ஆனால், இந்த முறை காரை சரி செய்யும்படி கூறாமல் ட்யூன் அப் நிறுவனம் அப்படியே ரீமேப் செய்ய தொடங்கி இருக்கின்றது.

இதுகுறித்த ஹாரியர் உரிமையாளருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே கார் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அப்போதே மிகப் பெரிய சிக்கலுக்கு தன் கார் ஆளாகி இருப்பது ஹாரியரின் உரிமையாளருக்கு தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இந்த தவறுகளுக்கு ட்யூன்-அப் நிறுவனம் எந்தவித பொறுப்பையும் ஏற்கவில்லை.

மேலும், தன்னுடைய ட்யூன்-அப்பில் எந்த தவறும் இல்லை என அவர் கூறி இருக்கின்றது. இதைத் தொடர்ந்து மேனுவலாக ட்யூன்-அப்பை களைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருக்கின்றார். இருப்பினும் அது தோல்வியுற்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே சிக்கலுடன் அருகில் இருந்த டாடா சர்வீஸ் மையத்திற்கு ஹாரியர் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றது.

அங்கு ஹாரியர் எஸ்யூவி பல கட்ட ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் வாயிலாக இசியூ சிஸ்டத்தில் புகை அடைந்திருப்பதை டெக்னீசியன்கள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, இசியூ ரீ-பிளேஸுக்காக ஆர்டர் வழங்கப்பட்டு, வாரண்டியின் அதனை இலவசமாகவே டாடா சர்வீஸ் மையம் மாற்றிக் கொடுத்து இருக்கின்றது.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஹாரியர் கார் அதன் உரிமையாளரின் கைகளுக்கு கிடைக்க சுமார் ஒரு வாரம் ஆகி இருக்கின்றது. இத்தகைய அவலநிலையை தவிர்க்கவே கார்களை ஆஃப்டர் மார்க்கெட்டில் கொடுத்து எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஒரு சிலர் தேவையில்லாமல் இதுபோன்ற வீண் சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

Article Published On: Tuesday, March 21, 2023, 15:13 [IST]
English summary
Tata replaced ecu under warranty here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+