நல்ல கார் நிறைய இருந்தாலும் விற்பனையில் திணறுது! விற்பனையில் பெரிய சரிவைச் சந்தித்த டாடா!

மார்ச் மாதம் பிறந்துவிட்டது, ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்கள் பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டாடா நிறுவனம் தனது விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் கடந்தாண்டை ஒப்பிடும் போது வளர்ச்சியும் ஜனவரியை ஒப்பிடும் போது வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 42,862 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022 பிப்ரவரி மாதம் 39,981 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

நல்ல கார் நிறைய இருந்தாலும் விற்பனையில் திணறுது! விற்பனையில் பெரிய சரிவைச் சந்தித்த டாடா!

இதில் டாடா நிறுவனம் 7.21 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாத விற்பனையான 47,987 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 10.68 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது எண்ணிக்கையில் சுமார் 5125 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது கவனிக்க வேண்டிய சரிவாகும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 12.3 சதவீதம் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையாகும். அதே நேரம் டாடா நிறுவனம் ஏற்றுமதியில் 39 சதவீதம் கடந்த பிப்., மாதம் வளர்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 278 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு வெறும் 200 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.

இதில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் கணக்கிட்டால் மொத்தம் 5318 எலெக்ட்ரிக் வாகனங்களை டாடா நிறுவனம் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காகத் தயாரித்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் வெறும். 2934 வானகங்களைத் தான் விற்பனை செய்திருந்தது. இந்த செக்மெண்டில் 81 சதவீத வளர்ச்சியை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

இது போக கமர்ஷியல் வாகன விற்பனை விபரங்களையும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி டாடா நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 35,144 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு 33,894 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 4 சதவீத வளர்ச்சியாகும்.

கமர்ஷியல் வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த வகையில் டாடா நிறுவனம் 1421 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு 3658 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 61 சதவீத வீழ்ச்சியாகும். ஒட்டு மொத்தமாக கமர்ஷியல் வாகன விற்பனையில் டாடா நிறுவனம் 3 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் கார்கள் விற்பனையில் எப்பொழுதும் மாருதி தான் முதலிடத்தைப் பிடிக்கிறது. இரண்டாவது இடத்திற்குத் தான் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டு மாறி மாறி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ஹூண்டாய் தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 47 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

டாடா நிறுவனம் கமர்ஷியல் மற்றும் பயணிகள் வாகனம் என ஒட்டு மொத்த விற்பனையில் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த பிப் மாதம் மொத்தம் 78,006 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் வெறும் 73,875 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது இது 6 சதவீத வளர்ச்சியாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 2, 2023, 9:23 [IST]
English summary
Tata reported a decline in mom growth in yoy full report here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+