சத்தமே இல்லாம சம்பவத்தை செய்த டாடா.. இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செஞ்சிட்டு அமைதியா இருக்காங்களா!
டாடா மோட்டார்ஸின் பிரபலமான கார் மாடல்களில் ஹாரியர்-ம் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். உயர் விலை மற்றும் அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தளத்தைப் பயன்படுத்தியே டாடா மோட்டார்ஸ் இந்த காரை வடிவமைத்திருக்கின்றது.
இதனாலேயோ என்னமோ மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி காராக அது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனையே டாடா மோட்டார்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. இதன் வாயிலாக வெகு விரைவில் டாடா ஹாரியர் இவி வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது நிறுவனம் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம்), டிகோர் இவி மற்றும் டியாகோ இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே வெகு விரைவில் ஹாரியர் இவி இணைக்கப்பட இருக்கின்றது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் மிக உயரிய விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட இ-காராக நெக்ஸான் இவி மேக்ஸ் இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 453 கிமீ வரை ரேஞ்ஜ் தரும்.

இதைவிட குறைவான ரேஞ்ஜ் தரும் வெர்ஷனே நெக்ஸான் இவி பிரைம் ஆகும். இது ஓர் முழு சார்ஜில் 312 கிமீ வரை மட்டுமே பயணிக்கும். இதன் விலை ரூ. 14.49 லட்சம் ஆகும். நெக்ஸான் இவி மேக்ஸ் 16.49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இவற்றைவிட சற்று அதிக விலைக் கொண்டதாகவே ஹாரியர் இவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் முதன் முதலில் இந்த காரை கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. இந்த நிலையிலேயே தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டைச் செய்து உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டபோது இருந்ததைக் காட்டிலும் இப்போது அதிக கவர்ச்சியானதாக அது மாற்றப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிகின்றது. பெயிண்டிங் வேலைத் தொடங்கி லைட் வரை என பலவற்றை புதிதாக அதில் சேர்த்திருக்கின்றது, டாடா மோட்டார்ஸ். கருப்பு நிற பிரத்யேக அணிகலன்கள், ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், முழு அகல பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய எல்இடி லைட்டுகள் மற்றும் முழுமையாக மூடப்பட்ட கிரில் உள்ளிட்டவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவையே எரிபொருளில் இயங்கும் ஹாரியர் இடம் இருந்து எலெக்ட்ரிக் ஹாரியரை வேறுபடுத்திக் காட்ட இருக்கின்றது. இந்த மின்சார கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது இப்போது வரை அறியப்படாத தகவலாக இருக்கின்றது. இப்போது நிறுவனம் இருக்கும் வேகத்தை வைத்து பார்க்கையில் 2025 ஆம் ஆண்டிற்குள் ஹாரியர் இவி விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் வெளியாகவில்லை. அதேவேளையில், டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹூண்டாய் கோனா இவி, பிஒய்டி அட்டோ 3 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். டாடா ஹாரியர் எஸ்யூவி ஓர் முழு சார்ஜில் 400 கிமீ முதல் 500 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காரை வி2எல் (vehicle-to-load) மற்றும் வி-2-வி (vehicle-to-vehicle) வசதிக் கொண்ட வாகனமாகவும் டாடா மோட்டார்ஸ் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான காரையே தற்போது டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது. இது டாடா கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் அல்ட்ராஸ் இவி, பஞ்ச் இவி, கர்வ் மற்றும் அவின்யா என பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இவற்றில் பஞ்ச் இவி, அல்ட்ராஸ் இவி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றே விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவற்றிற்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









