மத்திய அரசால் புதிதாக தொடங்கப்பட்ட பாரத் என்சிஏபி-யை அலற விட்ட டாடா கார்கள்! இந்த கார்களை நம்பி வாங்கலாம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் புகழ்பெற்ற தயாரிப்புகளில் சஃபாரி (Safari) மற்றும் ஹாரியர் (Harrier) ஆகிய கார் மாடல்களும் அடங்கும். இந்த இரண்டு கார் மாடல்களே மிக மிக அதிகம் பாதுகாப்பு திறன் கொண்டது என்கிற சான்றை புதிதாக தொடங்கப்பட்ட பாரத் என்சிஏபி (Bharat NCAP) இடம் பெற்றிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் அனைத்து தயாரிப்புகளும் (கார் மாடல்களும்) பாதுகாப்பிற்கு பெயர்போனவையாகக் காட்சியளிக்கின்றன. இதற்கு சான்றாகவே நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளான சஃபாரி (Safari) மற்றும் ஹாரியர் (Harrier) ஆகிய இரண்டு கார் மாடல்களும் பாரத் என்சிஏபி முன்னிலையில் செயல்பட்டு இருக்கின்றன.

அதாவது, இந்த இரண்டு கார் மாடல்களும் புதிதாக தொடங்கப்பட்ட பாரத் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் அதிக பாதுகாப்பு புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்திருக்கின்றன. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அதிக பாதுகாப்பு புள்ளிகள் என்பதற்கு பதிலாக உச்சபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கை அந்த கார்கள் பெற்றிருக்கின்றன என கூறலாம்.
ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே அந்த கார்கள் பெற்றிருக்கின்றன. இதுநாள் வரை இந்தியாவிற்கான கார் மாடல்கள் குளோபல் என்சிஏபி வாயிலாகவே மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே இந்தியாவிலேயே இந்த பணிகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொள்ளும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது.

இதன் அடிப்படையில் தொடங்கப்பட்டதே பாரத் என்சிஏபி ஆகும். இது தொடங்கப்பட்டு முதல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸின் சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார் மாடல்கள் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. முதல் ஆய்வே தரமான சம்பவத்தை நிகழ்த்தும் விதமாக அதிக பாதுகாப்பு புள்ளிகளைப் பெற்று மோதல் சோதனைச் செய்யும் அதிகாரிகளை மிரட்டிவிட்டிருக்கின்றன.
ஆகையால், பாரத் என்சிஏபி முதன் முதலில் மோதல் சோதனைக்கு உட்படுத்திய நிறுவனமாகவும், மேலும், அதனிடமிருந்து ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற முதல் நிறுவனமாகவும் டாடா மோட்டார்ஸே மாறி இருக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலும் இந்த இரு கார் மாடல்களும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையேப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே பாரத் என்சிஏபியிலும் தரம் குறையாமல் டாடாவின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் அதே ஐந்துக்கு 5 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று இருக்கின்றன. ஆகையால், இந்த கார்கள் இந்தியர்களின் மனதை இன்னும் கூடுதலாகக் கவர்ந்தவையாக மாறி இருக்கின்றன.
இந்த காருக்கான பாதுகாப்பு தர சான்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்காரியே வழங்கினார். மேலும், பாரத் என்சிஏபி உலக தரநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், சூப்பரான தர விருதைப் பெற்றிருப்பதற்காக டாடாவிற்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

டாடா மோட்டார்ஸ் இந்த கார்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக சஃபாரி மற்றும் ஹாரியர் கார் மாடல்களில் 6 ஏர் பேக்குகளை டாடா கட்டாயமாக்கி இருக்கின்றது. இதுதவிர ஏழு ஏர் பேக்குகள் ஆப்ஷனையும் இந்த கார் மாடல்களில் டாடா மோட்டார்ஸ் வழங்குகின்றது.
மேலும், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் அம்சத்தையும் இந்த காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக டாடா வழங்குகின்றது. இதுதவிர, 3 பாயிண்ட் சீல் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள், சீட் பெல்ட் ரெட்ரேக்டர், சீட் பெல்டை தானாக இருக்கும் அம்சம், லோடை லிமிட் செய்யும் வசதி என ஏகப்பட்ட அம்சங்களை இந்த இரு கார் மாடல்களும் தனக்குள் தாங்கி இருக்கின்றன.
இதுதவிர அதிக கவர்ச்சியான தோற்றத்திற்கு சொந்தக்காரர்களாக இந்த கார் மாடல்கள் இருக்கின்றன. சமீபத்தில்தான் டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தின என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் சூப்பரான கான்செப்ட் மாடல்களில் ஒன்றான கர்வ்-ஐ தழுவியே இந்த கார் மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை வடிவமைக்க டாடா மோட்டார்ஸ் ஓமெகாஆர்க் எனும் ஆர்கிடெக்சரைப் பயன்படுத்துகின்றது. இந்த தளம் லேண்ட் ரோவரின் டி8 பிளாட்பாரத்தை தழுவி உருவாக்கப்பட்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு இணையான சொகுசு வசதிகளையும், கவர்ச்சியான தோற்றத்தையும் டாடா கார்கள் தாங்கி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் டாடா சஃபாரி ரூ.16.19லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.15.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் அதன் விலையைக் காட்டிலும் மிக உயரியதாக இந்த கார்கள் காட்சியளிக்கின்றன. ஆகையால், செலவு செய்யும் பணத்திற்கு ஒர்த்தான கார்களாக அவைக் காட்சியளிக்கின்றன.


Click it and Unblock the Notifications









