கான்கிரீட்-பஸ் இடையில் சிக்கிய கார்.. டாடா காரின் பாதுகாப்பு தரத்தை நிரூபிக்க இதைவிடவா நல்ல சான்று வேணும்!
டாடாவின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக சஃபாரி இருக்கின்றது. இந்த காரே பேருந்து மற்றும் கான்கிரீட்டுக்கு இடையில் சிக்கி பெரும் விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்தில் சஃபாரி முழுவதுமாக உருக்குலைந்து போன நிலையிலும், அதன் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த அனைத்து பயணிகளும் உயிர் தப்பி இருக்கின்றனர். இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. அதிக பாதுகாப்பிற்கு பெயர்போன வாகனங்களாக டாடாவின் தயாரிப்புகள் இருக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த விபத்து சம்பவம் அமைந்துள்ளது.

ஜம்மு-ராஜூரி-பூன்ச் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்திற்கு முழு காரணம் பேருந்துதான் என கூறப்படுகின்றது. பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் அந்த பேருந்து மிகவும் அதீத வேகத்தில் வந்திருக்கின்றது. குறிப்பாக, எதிர் திசையில் வரும் வாகனங்களுக்குகூட வழிவிடாமல் அந்த வாகனம் வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே டாடா சஃபாரி காரை அந்த பேருந்து கரப்பான் பூச்சியை நசுக்குவது போல் கான்கிரீட்டுடன் சேர்த்து நசுக்கி இருக்கின்றது. நல்ல வேலையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதேவேளையில், டாடா சஃபாரியை ஓட்டி வந்தவருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் இருந்த மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். ஏர்-பேக் ஓபனாக காரணத்தினாலேயே இந்த விபத்தில் டாடா சஃபாரி காரின் டிரைவருக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என கூறப்படுகின்றது. காரின் முகப்பு பகுதியில் மோதல் ஏற்படாததே ஏர்-பேக் திறக்காமல் போனதற்கு முக்கிய காரணம் ஆகும்.
ஏர் பேக்கை திறக்கும் சென்சார்கள் காரின் முகப்பு பகுதியிலேயே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், பேருந்தின் பல்வேறு பாகங்கள் காருக்குள் புகந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதுதவிர, பேருந்தின் அதிக உயரம் சஃபாரியை மேலும் கடுமையாக பாதிப்படையச் செய்திருப்பதையும் நாம்மால் பார்க்க முடிகின்றது.

டாடா மோட்டார்ஸின் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு தர ஆய்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவையாக இருக்கின்றன. குறிப்பாக, பஞ்ச், நெக்ஸான் எஸ்யூவி மற்றும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் உள்ளிட்ட கார் மாடல்கள் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று இருக்கின்றன.
ஆனால், இந்த நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் இதுவரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை தெரியவில்லை. ஒருவேளை இந்த இரு கார்களும் கிராஷ் டெஸ்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டால் அவை அதிக ஸ்டார்களையே பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு கடந்த கால விபத்து சம்பவங்களே சான்றாக இருக்கின்றன. கடுமையான விபத்துகளில் இருந்தும்கூட தன்னுடைய பயணிகளை சஃபாரியும், ஹாரியரும் காப்பாற்றி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் விற்பனைச் செய்து வரும் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக சஃபாரி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவையாக இருக்கின்றன. இந்த காரணத்திற்காகவே டாடா கார்களின் விற்பனை முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்திருக்கின்றது. இந்த இரு கார் மாடல்களே தற்போது நிறுவனத்தை இந்தியாவில் தூக்கி பிடிக்கும் மாடல்களாக மாறி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









