அரசியல் வாதிங்க எல்லாம் இனி இந்த காரை வாங்க போட்டி போடுவாங்க! எப்படி என்ன இருக்குது இதுல?

டாடா நிறுவனம் தற்போது தனது சஃபாரி காரை சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டில் காரின் வெளிப்புற மற்றும் உட்புறங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காரில் புதிய தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் தனது சஃபாரி காரில் அப்டேட் செய்யப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்க டாடா நிறுவனம் எங்கள் டிரைவ்பார்க் குழுவை புனேவிற்கு அழைத்தது, அங்கு எங்கள் குழு கார் ஓட்டும் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளோம் இந்த வீடியோவை கீழே நீங்கள் காணலாம்.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட சஃபாரி காரில் வெளிப்புற மற்றும் உட்புறத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த காரின் லுக்கே மாறியுள்ளது. இந்த கார் அறிமுகமாகும் போது டாடா ஹாரியர் காரின் ஒரு நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாகவே இந்த கார் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த காரையும் ஹாரியர் காரையும் ஒப்பிட்டால் அதிகமான வித்தியாசங்களை காண முடிகிறது.

updated tata safari car video review

டிசைன் மற்றும் வடிவமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும் மெக்கானிக்கல் ரீதியாக இந்த காரில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய காரில் இருந்த அதே இன்ஜின் மற்றும் அதன் கியர் பாக்ஸ் ஆகிய விஷயங்கள்தான் இருக்கின்றன. முக்கியமாக இந்த காரில் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் கியர் பாக்ஸ் ஆகும் இதை டாடா நிறுவனம் வாங்கி தனது கார்களில் பயன்படுத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 15, 2023, 16:23 [IST]
English summary
Tata safari facelift car video review in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+