ஊரே இப்ப இந்த காரை பத்தி தான் பேசுது! டாடா சஃபாரி கார் இப்ப இப்படி மாறிடுச்சா?

டாடா நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் காரான சஃபாரி காரை தன் நிறுவனம் அப்டேட் செய்து புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் காராக அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா ஹாரியர் காருடன், டாடா சஃபாரி காரும் தற்போது அப்டேட் செய்யப்பட்டு இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி டாடா சஃபாரி கார் ரூபாய் 16.19 லட்சம் என்ற விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

1998ம் ஆண்டு முதன்முறையாக டாடா நிறுவனம் தனது சஃபாரி காரை மிட் சைஸ் எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தியது. அப்பொழுதே இந்த கார் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வந்தனர். இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகள் இந்த கார் சிறப்பான விற்பனையில் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.

tata safari launch

இந்நிலையில் மீண்டும் இந்த காரை அப்டேட் செய்து டாடா நிறுவனம் 2021 ஆம் ஆண்டு மிட்-சைஸ் கிராஸ் ஓவர் எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தியது. அதன் முதல் இந்த கார் சிறப்பான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரை பலர் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் டாடா நிறுவனம் இந்த டாடா சஃபாரி காரை அப்டேட் செய்து இன்று அறிமுகம் செய்துள்ளது.

புதிய அப்டேட்டில் டாடா சஃபாரி காரில் உட்புறமும் வெளிப்புறமும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காரில் புதிதாக பல்வேறு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ என், எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் ஆல்கஸார் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது.

tata safari launch

இந்த அப்டேட்டில் சஃபாரி காரின் முன்பக்கம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்பிளிட் ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது. இது பேனட் நீளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஸ்போர்ட்டியான பம்பர் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கமும் முழுமையான எல்இடி லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள பம்பர் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தை பொருத்தவரை ஸ்டேரிங் வீல் நான்கு ஸ்போக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் லுமினேட் செய்யப்பட்ட டாடா லோகோ இருக்கிறது. இதே போல தான் நெக்ஸான் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் புதிதாக 12.3 டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே சிஸ்டம் ஆகியன உள்ளன.

tata safari launch

மேலும் இந்த காரில் டச் மூலம் ஆப்ரேட் செய்யக்கூடிய கிளைமேட் கண்ட்ரோல் பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காரில் ஆம்பியன்ஸ் லைட்டிங் ஸ்டிரிப் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் டேஷ்போர்டு முழுவதுமாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறது. மேலும் இந்த காரின் பின்பக்க கதவு கெஸ்ட்டர் மூலம் திறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது காலை வைத்தே கதவை திறக்கலாம்.

இது போக இந்த சஃபாரி காரில் வயர்லெஸ் சார்ஜர் முன்பக்க சீட்டுகளை எலெக்ட்ரிக் மூலம் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய வசதி, மேலும் இந்த சீட்டுகள் வென்டிலேடட் செய்யப்பட்ட சீட்களாக உள்ளன. சஃபாரி காரின் இரண்டாவது வரிசை சீட்டும் வென்டிலேட்ட் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இது போக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம், 7 ஏர் பேக்குகள், இஎஸ்பி, 360 டிகிரி கேமரா ஆகிய உள்ளன.

இந்த சஃபாரி கார் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதனுடன் அறிமுகமாகும் ஹாரியர் காரும் 5 ஸ்டார் ரேட்டிங் தான் பெற்றுள்ளது. இதனால் இந்த கார் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக பார்க்கப்படுகிறது. வழக்கமாக டாடா கார்கள் பாதுகாப்பான கார்களாக இருக்கும் நிலையில், இந்த காரும் அந்த பட்டியலில் தற்போது சேர்ந்துள்ளது.

புதிய சஃபாரி காரில் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டேரிங் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆபரேட் செய்ய லைட் ஆகவும் சுலபமாகவும் இருக்கிறது. இந்த காரின் பழைய இன்ஜினில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 168 எச்பி பவரையும் 350 என்எம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஸ்டாண்டர்ட்டாக முன்பக்க வீல் டிரைவ் காராக மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் காரை அப்டேட் செய்துள்ளது அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கிறது. புதிதாக வந்துள்ள அப்டேட்டில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்பு வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இதே நேரம் இந்த காரில் 4வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் தான். விரைவில் இந்த ஆப்ஷனையும் டாடா நிறுவனம் சஃபாரி காரில் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 17, 2023, 16:05 [IST]
English summary
Tata safari facelift debuts at inr 16 19 lakh specifications features and safety
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X