காரை கையில வாங்கினதுல சந்தோஷம் தாங்கல.. நாடே காத்து கெடந்த காரின் டெலிவரி பணிகளை தொடங்கியது டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ்-இன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக சஃபாரி இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே சமீபத்தில் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. நாடே இந்த காரின் வருகைக்காக காத்துக் கெடந்த நிலையில், அதன் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த நிலையிலயே தற்போது அந்த காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காருடன் சேர்த்து நிறுவனத்தின் மற்றுமொரு கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மாடலான ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tata safari facelift

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டே டாடா இந்த கார்களை இந்த விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் டெலிவரியையும் அது தொடங்கி இருக்கின்றது. டாடா சஃபாரி ரூ. 16.19 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த கார் மாடலின் அதிகபட்ச விலையே ரூ. 25.49 மட்டுமே ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். சஃபாரியில் டாடா நிறுவனம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஆப்ஷன் ரூ. 20.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கும்.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா இந்த சூப்பரான காரின் டெலிவரி பணியைத் தொடங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக காரை வாடிக்கையாளர்கள் டெலிவரி பெறும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. டாடா கார் விற்பனையாளர்களும், சில புதிய சஃபாரி உரிமையாளர்களும் இந்த வீடியோக்களை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

மேலும்,கார் டெலிவரி ஆனது குறிப்பிட்ட டீலர்ஷிப்புகளில் திருவிழாவைபோல நடைபெற்றிருக்கின்றது. கேக் வெட்டுதல், ஆட்டம் மற்றும் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றுடன் அரங்கேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. புதிய சஃபாரி முன்பு இருந்ததைவிட மிக அதிக அழகானதாக காட்சியளிக்கின்றது. கவர்ச்சியான வெளிப்புறத் தோற்றம், அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் சிறப்பு கருவிகள் என ஏகப்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்த காரை டாடா அப்கிரேட் செய்திருக்கின்றது.

இதனால்தான் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமாக அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையிலேயே சமீபத்தில் விற்பனைத் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது டெலிவரி பணிகளும் தொடங்கி இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல கான்செப்ட் கார் மாடலான கர்வ்-ஐ தழுவியே இந்த காரை புதுப்பித்து இருக்கின்றது.

இந்த காரை தழுவி உருவாக்கி இருப்பதனாலேயே ஃபேஸ்லிஃப்ட் சஃபாரிக்கு வேற லெவல் கவர்ச்சியான தோற்றம் கிடைத்திருக்கின்றது. மெல்லிய இழை போன்ற எல்இடி டிஆர்எல், சதுரமான ஹெட்லேம்ப், பனி மின் விளக்கு மற்றும் ஸ்பிளிட் செய்யப்பட்ட கிரில் உள்ளிட்டவை இந்த காரின் முன் பக்கத்தை அலங்கரிக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, இன்னும் பல அம்சங்கள் இந்த காரின் பின் பற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்ஜினைப் பொருத்த வரை 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொருத்த வரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதன் மேனுவல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 16.30 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 14.50 கிமீ மைலேஜையும் வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இந்த காரில் சிறப்பம்சங்கள் மிக மிக அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. டச் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திரை, முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒளிரும் டாடா லோகோக் கொண்ட ஸ்டியரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டுகள், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட் வசதிக் இருக்கைகள் மற்றும் அடாஸ் அம்சம் உள்ளிட்டவை ஃபேஸ்லிஃப்ட் சஃபாரியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர காலை அசைத்தால் திறக்கும் டெயில்-கேட்டும் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் இந்த கார் அதிக பாதுகாப்பு திறன் கொண்டது என குளோபல் என்சிஏபி தெரிவித்து இருக்கின்றது. சமீபத்தில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இந்த காரை சோதனை செய்ததில், அது 5 ஸ்டார்களைப் பெற்று அசத்தி இருக்கின்றது. சிறியவர் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் அதிக பாதுகாப்பை வழங்கக் கூடிய ஓர் கார் மாடலே இது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 25, 2023, 19:50 [IST]
English summary
Tata safari facelift delivery started in india here is video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+