வயசானாலும் இந்த காரோட ஸ்டைலும் பவரும் மாறவேயில்லை! புதிய லுக்கில் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் டெஸ்டிங்!

டாடா நிறுவனத்தின் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷர் கார் பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் சஃபாரி என்ற எஸ்யூவி காரை நீண்ட ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த கார் இந்நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்று. இந்த காரை டாடா நிறுவனம் தற்போது அப்டேட் செய்து வருகிறது. இந்த அப்டேடட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tata safari facelift spotted in bangalore

இந்த காரின் டிசைனை பொருத்தவரை முகப்பு பகுதியை டாடா நிறுவனம் முழுமையாக மாற்றியுள்ளது. ஆனால் முன்பக்கம் பழைய மாடலில் இருந்த ஸ்பிலிட் ஹெட்லைட் செட்டப்பை அப்படியே வைத்துள்ளது. ஆனால் அதற்கு மேல் எல்இடி டிஆர்எல்ல பானட் பகுதி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லைட் கிளஸ்டர் நீள வாக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புற கட்டமைப்பைப் பொருத்தவரை பெரிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களின் ரெட் டார்க் எடிசன் கார்களில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. அதே டச் ஸ்கிரீன் இந்த காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இது போக டேஷ்போர்டு டிசைனிலும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் கடைசியாக இன் ஸ்டியரிங் வீல் டாடா ஃபேஸ்லிஃப்ட் கார் டெஸ்ட் காரில் உள்ள அதே 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல்லை எதிர்பார்க்கலாம்.

tata safari facelift spotted in bangalore

இது போக நம் கேமரா கண்ணில் பட்ட காரில் ஐவிஆர்எம் பகுதியில் புதிய சென்சார் இருக்கிறது. இது அடாஸ் தொழிற்நுட்பத்திற்கான சென்சாராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த காரில் ரெட் டார்க் எடிசன் காரில் உள்ளதைப் போல அடாஸ் தொழிநுட்பம் இருக்கும் என எதிர்பார்க்கலாம் அதில் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், மற்றும் பைலட் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 170 எச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது போக இந்த காரில் புதிதாக 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 170 எச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

tata safari facelift spotted in bangalore

இந்த கார் இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டில் விற்பனைக்க வரும் போது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் ஹூண்டாய் அல்காஸர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சஃபாரி கார் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வந்தாலும் மக்களுக்கு இந்த கார் மீதான மோகம் குறையவில்லை. தொடர்ந்து விற்பனை அதிகமாகிக்கொண்டே தான் வருகிறது. தற்போது அதி நவீன வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு வருவது இந்த கார் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 18, 2023, 18:30 [IST]
English summary
Tata safari facelift suv car spotted testing in bangalore
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X