போட்டி நிறுவனங்களை எல்லாம் வயிறு எரிய வைத்த டாடா! இந்த விஷயத்தை கேட்டதும் குப்புன்னு வேர்த்திருக்கும்!
2022-23ம் நிதியாண்டு நேற்று முன் தினத்துடன் (மார்ச் 31) முடிவடைந்தது. இதை தொடர்ந்து 2023-24ம் நிதியாண்டு நேற்று (ஏப்ரல் 1) தொடங்கியது. இந்த நேரத்தில் கடந்த நிதியாண்டிற்கான கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Report), தற்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்துடையதும் ஒன்றாகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 5,38,640 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த 2021-22ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் அதிகம் ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகபட்ச நிதியாண்டு விற்பனை எண்ணிக்கை என்பதுதான் அந்த விஷயம்.

இதற்கு முன்பாக வேறு எந்த நிதியாண்டிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்தது கிடையாது. இவை அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு, டாடா பன்ச் (Tata Punch), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.

கடந்த 2022-23ம் நிதியாண்டில், இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் மொத்த எண்ணிக்கையில், மேற்கண்ட 4 கார்களின் பங்களிப்பு 66 சதவீதம் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் பாதுகாப்பில் அசத்துவது, இந்திய வாடிக்கையாளர்களை கூட்டம் கூட்டமாக அதன் பக்கம் ஈர்த்து வருகிறது.
பெட்ரோல் (Petrol), டீசலில் (Diesel) இயங்கும் ஐசி இன்ஜின் (Internal Combustion Engine) கார்களின் விற்பனையில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனி முத்திரை பதித்து வருகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை முதல் முறையாக 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.
கடந்த 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 154 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV), டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.
வரும் மாதங்களில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) மற்றும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV) என ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை, வேறு எந்த நிறுவனத்தாலும் வீழ்த்த முடியாத என்ற சூழல் காணப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி, இந்தியாவின் கார் சந்தையில் 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திற்கு மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மிகவும் குறைவான விலையில் புதிய கார் ஒன்றை களமிறக்கியாக வேண்டிய கட்டாயத்தில் ஹூண்டாய் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








