கெத்து காட்டிய டாடா! மாருதி ஹூண்டாய் எல்லாம் நகத்தை கடிச்சிக்கிட்டு இருக்காங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாத விற்பனையில் 74, 172 வாகனங்களை விற்பனை செய்து விற்பனையில் ஒரு சிறிய சரிவை சந்தித்துள்ளது. ஒரு சதவீத விற்பனை சரிவில் இந்நிறுவனம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனை செய்த வாகனங்களின் விற்பனை ரிப்போர்ட்டை முழுமையாக காணலாம் வாருங்கள்.

டிசம்பர் மாதம் பிறந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நிறுவனமாக தங்கள் நவம்பர் மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி டாடா நிறுவனம் மொத்தமாக கடந்த நவம்பர் மாதம் முழுவதுமாக 74,172 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 75,478 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. தற்போது விற்பனையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.

tata sales report november 2023

இதுவே பயணிகள் வாகனத்தை பொறுத்தவரை டாடா நிறுவனம் மொத்தம் 46,0 68 வாகனங்கள் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்துள்ளது இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 46,037 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனையில் தான் டாடா நிறுவனம் இந்த ஆண்டும் இருக்கிறது. இதனால் டாடா நிறுவனம் கடந்த மாதம் பெரிய அளவில் வளர்ச்சியை சந்திக்கவில்லை.

இந்தியாவில் டாடா நிறுவனம் தான் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கிறது. டாடா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 4761 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. அதில் 75 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள் எல்லாம் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

tata sales report november 2023

இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 4451 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இது விற்பனையில் 7% வளர்ச்சி என்றாலும் ஏற்றுமதியில் 81% வீழ்ச்சியை எலெக்ட்ரிக் வாகன பிரிவில் சந்தித்துள்ளது. ஆனால் உள்நாட்டு விற்பனை பெரும் அளவில் வளர்ச்சியை சந்தித்துள்ளது.

டாடா நிறுவனம் சமீபத்தில் தான் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் அப்டேட் செய்யப்பட்ட ஹாரியர் மற்றும் சஃபாரி மற்றும் புதிய நெக்ஸான் இவி ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியது. டாடா நிறுவனத்தின் பஞ்ச் என்ற மைக்ரோ எஸ்யூவி கார் தொடர்ந்து விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது. இதுபோக ஆல்ட்ராளுக காரில் சிஎன்ஜி வெர்ஷன் வந்ததால் அந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது.

tata sales report november 2023

டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு புதிய கார்களை களமிறக்க முடிவு செய்துள்ளது. டாடா பஞ்ச் மற்றும் ஹாரியர் இவி ஆகிய கார்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. டாடா பஞ்ச் இவி தற்போது விற்பனையாகி வரும் நெக்ஸான் இவி காருக்கு குறைந்த விலையில் அறிமுகமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கர்வ் காரிலும் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் விரைவில் வெளியாகும். முன்னதாக இதன் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரை பொருத்தவரை 500 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் பிரச்சனையை பொருத்தவரை மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் ஹூண்டாய் கிரெக்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி அஸ்டர் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்வ் காரின் பெட்ரோல் வெர்ஷன் காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டிஜிபி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் முதல்முறையாக டாடா கர்வ் காரில் தான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த இன்ஜின் 168எச்பி பவரையும் 280என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அடுத்து ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களிலும் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் தற்போது இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் மூன்றாவது நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தொடர்ந்து நிறுவனத்தின் கார்கள் சிறப்பாக விற்பனை ஆகி வருகின்றன. டாடா நிறுவனத்தின் கார்கள் தரமான கார்களாக இருக்கும் என மக்கள் நினைப்பதால் இந்த கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வருகிறது. டாடா நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் களமிறங்கும் போது நிச்சயமாக விற்பனை எண்ணிக்கை கூடும். டாடா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்யும் 2வது நிறுவனமாக மாறும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, December 2, 2023, 7:00 [IST]
English summary
Tata sales report november 2023 slight drop in sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X