மாருதி இந்த விஷயத்துல கத்துக்குட்டியா தான் இருக்குது! ஆனா டாடா மாஸ்டர்ஸ் பண்ணிட்டு இருக்காங்களே!
டாடா நிறுவனம் தனது இவி கார்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்நிறுவனம் 5 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அது குறித்து தான் விரிவாக காணப்போகிறோம்.
டாடா நிறுவனம் தான் தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் மிகப்பெரிய மார்க்கெட் பங்கை வைத்துள்ளது. மிக விரைவாகவே எலெக்ட்ரிக் கார் சந்தையில் இந்நிறுவனம் நுழைந்து விட்டதால் அந்த அட்வான்டேஜை தற்போது அந்நிறுவனம் அனுபவித்து வருகிறது. மேலும் இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய மக்களுக்கு ஏற்றவாறு இருப்பதால் பலர் இதை விரும்புகின்றனர்.

மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் சந்தைக்குள் முழுமையாக களம் இறங்குவதற்கு முன் இதிலிருந்து மிகப்பெரிய பலனை பெறுவதுடன், தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பிடிக்க வேண்டும் என டாடா நிறுவனம் தற்போது முயற்சி செய்து வருகிறது. இதற்காக அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 5 புதிய எலக்ட்ரிக் கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதைப் பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
பஞ்ச் இவி: டாடா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகம் என்றால் அது பஞ்ச் இவி தான் இந்த காரை டாடா நிறுவனம் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த கார் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் அவ்வப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டெஸ்ட் செய்வதை நம்மால் காண முடிகிறது.

டாடா நிறுவனம் இந்த காரில் முக்கியமாக முன்பக்கத்தில் சார்ஜிங் போர்டை வழங்கியுள்ளது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது இருந்தாலும் சில எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜில் 300- 350 கிலோமீட்டர் சார்ஜ் ரேஞ்ச் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரியர் இவி: கடந்த ஜனவரி மாதம் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஹாரியர் இவி காட்சிப்படுத்தப்பட்டது. இது 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹாரியர் இவி கார் ஒமேகா ஆர்க் என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.

இந்த காரில் 60 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரி இந்த காரை 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் வரை எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் டூயல் மோட்டார் சிஸ்டம் மற்றும் ஆல்வீல் டிரைவ் செட்டப் ஆகியன இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சஃபாரி இவி: ஹாரியர் இவி காருடன் சேர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி இவி காரையும் இந்திய மார்க்கெட்டுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த கார் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட டாடா சஃபாரி காரின் டிசைனை போலவே இந்த இவி காரின் டிசைனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் கார் என்பதற்கான சில மாற்றங்கள் மற்றும் இதில் எதிர்பார்க்கலாம் ஹாரியர் இவி காரில் உள்ள அதே எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி ஆகிய இந்த காரிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெறும்.
கர்வ் இவி: டாடா நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த காரை முதன்முதலாக காட்சிப்படுத்தியது. டாடா நிறுவனம் தனது புதிய தலைமுறை இவி ஆர்க்கிடெக்சரில் இந்த காரை உருவாக்குகிறது. இந்த பிளாட்ஃபார்மில் பல்வேறு விதமான பாடி டைப்பில் உள்ள எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க முடியும்.

குறிப்பாக இந்த கார் ஒரு முறை சார் செய்தால் 400 முதல் 500 கிலோமீட்டர் ரேஞ்ச் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 2024 ஆம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இதே காரின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட வெர்ஷனும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாட்டா சியாரா இவி: டாடாவின் சியரா கார் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டு 2025-ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்செப்ட் கார் கடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோலியம் ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த கார் அறிமுகமானால் டாடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் பவர் டிரைன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் உள்ளது போலவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த பல முக்கியமான தகவல்கள் எல்லாம் 2024-ம் ஆண்டு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவாகிக் கொண்டே இருக்கிறது. பெட்ரோல் கார்களை வாங்க விரும்பும் பலர் தற்போது அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் கார்களை வாங்கினால் என்ன என யோசித்து வருகின்றனர். இதை தற்போது டாடா நிறுவனம் பெரிய அளவில் பயிராக்கி கொண்டு வருகிறது. இதற்கு இந்த இவி கார்கள் எல்லாம் மிகப்பெரிய பலனை தரும்.


Click it and Unblock the Notifications









