இறங்கி அடிக்க டாடா முடிவு பண்ணிருச்சு... துண்டை காணோம் துணிய காணோம்னு போட்டியாளர்கள் ஓட போறாங்க!

டாடா மோட்டார்ஸ் இந்திய மின் வாகன சந்தையை குறிவைத்து எக்கசக்க எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் கார்களின் டீசரை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் வெகு விரைவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ தொடங்க இருக்கின்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட வாகன உற்பத்தியாளர்கள் பங்குபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், இந்த உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி உலக அளவில் பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே வாகன ஆர்வலர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் முயற்சியில் இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது.

டாடா

2023 ஆட்டோ எக்ஸ்போ

இதுவும், ஆட்டோ எக்ஸ்போவில் பங்குகொள்ள இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பங்களிப்பின் அடிப்படையில் அங்கு சில கார் மாடல்களை நிறுவனம் காட்சிப்படுத்த இருக்கின்றது. இந்த கார்கள் சிலவற்றின் டீசர் படங்களை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுவே வாகன ஆர்வலர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. நிறுவனம் கார்களின் நிழற்படங்களை வெளியீடு செய்துள்ளது. அதாவது, உருவத்தை வெளிப்படுத்தாத மறைமுக படங்களையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

ஆறு எலெக்ட்ரிக் கார்கள்

நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவே டீசர் படத்தை வெளியிட்டு உள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் டாடா சார்பில் வெளியீடு செய்யப்பட இருக்கும் எலெக்ட்ரிக் கார்களின் டீசர் படத்தையே அது வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் 6 எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், மூன்று மாடல்களின் டீசர் படங்களே டீசர் வாயிலாக வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

டாடா

ஹாரியர் இவி, சஃபாரி மற்றும் அல்ட்ராஸ் இவி ஆகியவற்றின் படங்களே வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. உருவத்தை வைத்தே நாங்கள் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றோம். நிறுவனம் சார்பில் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா மோட்டார் பஞ்ச் இவி, அவின்யா மற்றும் கர்வ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவற்றில் அவின்யா மற்றும் கர்வ் ஆகிய இரு கார் மாடல்களின் கான்செப்ட் மாடலும் இந்தியாவில் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றையே இன்னும் சில தினங்களில் அல்ட்ராஸ் இவி, ஹாரியர் இவி, சஃபாரி இவி மற்றும் பஞ்ச் இவி உடன் ஆட்டோ எக்ஸ்போவில் முழுமையாக காட்சிப்படுத்திட டாடா தற்போது திட்டம் போட்டு இருக்கின்றது. தற்போது இந்தியாவின் மிக சிறந்த மின்சார கார் உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

டாடா

மின் வாகன பிரியர்களுக்கு குஷியான தகவல்

இதற்கு வலு சேர்க்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருப்பதை இந்த எதிர்கால மாடல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆமாங்க, நிறுவனத்தின்கீழ் எதிர்பார்த்திராத சில மாடல்கள் எல்லாம் மின்சார வெர்ஷனில் வர இருக்கின்றது. சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவற்றில் மின்சார கார் எதிர்பார்க்காத ஒன்று. இவற்றை எலெக்ட்ரிக் வெர்ஷனில் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது நிறுவனத்தின் கார் பிரியர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கின்றது.

குறிப்பாக, எஸ்யூவி கார் பிரியர்களை இந்த தகவல் செம்ம மகிழ்ச்சியாக்கி இருக்கின்றது. இந்த இரு கார்களுக்கும் எஸ்யூவி சந்தையில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை இரட்டிப்பாக்க இவற்றின் வெர்ஷன் உதவலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவியாக இப்போது டாடாவின் நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனே, இந்திய மின்வாகன சந்தையின் மிக சிறந்த விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

டாடா நெக்ஸான் இவியின் சிறப்புகள்

டாடா நெக்ஸான் இந்திய சந்தையில் இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய இரு விதமான வேரியண்டுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. முதல் மாடலைக் காட்டிலும் இரண்டாவது மாடல் அதிக ரேஞ்ஜை தரக்கூடிய வெர்ஷனாக உள்ளது. நெக்ஸான் இவி மேக்ஸ் ஓர் முழுமையான சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜை தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 40.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், சிறந்த இயக்கத்தை வழங்கும் விதமாக 105 kW திறன் கொண்ட மின் மோட்டார் நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 143 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. நெக்ஸான் இவி பிரைமில் 30.2 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சிங்க்ரோனஸ் மேக்னட் இன்டக்சன் மின் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 129 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 10, 2023, 16:45 [IST]
English summary
Tata shared official teaser for an upcoming ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X