கட்டுமரத்தை வைத்து டாடா வடிவமைத்துள்ள புதிய கார்! இதைக் குட்டி சொகுசு கப்பல்னு கூடச் சொல்லலாம் போலயே!
டாடா நிறுவனம் தனது அவின்யா என்ற எலெக்ட்ரிக் எம்பிவி கான்செப்ட் காரை ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைத் தொடர்ந்து காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனத்தில் ஒன்று டாடா. இந்நிறுவனம் வெளியிடும் கார்களின் தரம் எல்லாம் சிறப்பாக இருப்பதாக மக்கள் மத்தியில் பெயர் கிடைத்துள்ளது. முக்கியமாக இந்த நிறுவனத்தின் கார்கள் எல்லாம் கிராஷ் டெஸ்ட்டில் சிறப்பாக ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் பல எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது அதில் ஒன்று தான் டாடா அவின்யா கார். இது ஒரு எலெக்ட்ரிக் கான்செப்ட் எம்பிவி காராகும்.

டாடா நிறுவனம் கடந்தாண்டு ஏப்ரல் மாதமே இந்த காரை பொது பார்வைக்காகக் கொண்டு வந்தது. தற்போது இந்த காரை டாடா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனம் இந்த அவின்யா இவி கான்செப்ட் காரை கட்டுமர கப்பலின் தோன்றத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் இந்த காரை வரும் 2025ம் ஆண்டு தான் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜென்3 இவி கட்டமைப்பில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் அடுத்த தலைமுறை கனெக்டிவிட்டி வசதிகள், மற்றும் மேம்படுத்தப்பட்ட டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம் எல்லாம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் உருவாகவுள்ள ஜென்3 இவி கட்டமைப்பு என்பது அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பத்தில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இந்த காரை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை தாராளமாகப் பயணிக்கலாம் எனவும்,அதிகமான ரேஞ்ச் கொண்ட காராக இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அவின்யா காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை முற்றிலும் புதிய டிசைன் பிலாஸஃபியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் மொழி இந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் கார்களில் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரின் முன்பக்கமும் பின்பக்கமும் ஸ்லீக் மற்றும் ஷார்ப்பான எல்இடி லைட் பார்கள் காரின் அகலத்திற்குப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லைட்பார் டாடா நிறுவனத்தின் லோகோவை பிரதிபலிக்கும் வகையில் T வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க்க டிசைனில் எந்த வதமான க்ரீஸ்களும் இல்லாமல் ஸ்மூத்தாக இருக்கிறது. பக்கவாட்டில் இந்த காரில் பட்டர்ஃப்ளை டோர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் அதிகமான இட வசதி இருக்கிறது.

இந்த அவின்யா என்ற பெயர் சமஸ்கிருத பெயரிலிருந்து திரிபு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் புதுமை என்பதாகும். இந்த காரின் கேபின் கம்ஃபோர்ட்டாகவும், அதிக இட வசதியுடனும் இருக்கிறது. இதன் அட்வான்ஸ்டு தொழிற்நுட்பம் காருக்கு மொபிலிட்டிகான புதிய மொழியையே வழங்குகிறது. இந்த அவின்யா இவி கார் டிரெடிஷனல் செக்மெண்ட் காராக மட்டுமல்லாமல் இந்த கார் அதிகமான பிரமியம் அம்சங்கள் நிறைந்த காராகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த காரின் கேபிள் சிம்பிளாவும் அமைதியாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








