டாடா சியாரா காரின் டிசைன் இப்படிதான் இருக்க போகுதா.. எந்த காரும் இதுக்கு முன்னாடி நிக்க முடியாது போலிருக்கே!

டாடா சியாரா காரின் டிசைன் (Tata Sierra Design Patent) இணையத்தின் வாயிலாகக் கசிந்துள்ளது. விரைவில் இந்த கார் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற சூழலிலே அந்த காரின் டிசைன் படம் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களுக்கு புதிய அவதாரத்தின் வாயிலாக மறு வாழ்க்கை அளித்து வருகின்றது. அதாவது, கடந்த காலங்களில் புகழ்பெற்ற கார் மாடலாக விளங்கியவற்றை புதிய அவதாரத்தில் வடிவமைத்து, அதனை விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றது.

Tata sierra design patent

அந்தவகையில், அது விற்பனைக்குக் கொண்டு வந்த ஓர் கார் மாடலே சஃபாரி (Safari) ஆகும். கடந்த காலத்தில் கிடைத்ததைப் போலவே நல்ல ரெஸ்பான்ஸ் இந்த காருக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அடுத்தடுத்து என இன்னும் சில தன்னுடைய கடந்த சூப்பர் ஹீரோ கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது, டாடா மோட்டார்ஸ்.

அந்தவகையில், அது அடுத்ததாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் கார் மாடலே சியாரா (Sierra) ஆகும். இதன் புதிய அவதாரத்திலான மாடலே கடந்த 2020ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸால் வெளியீடு செய்யப்பட்டது. ஆட்டோ எக்ஸ்போவிலேயே அது காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், காட்சிப்படுத்தப்பட்ட சியாராவானது வெறும் கான்செப்ட் மாடல் மட்டுமே ஆகும்.

அந்த நேரத்தில் இந்த காரை உற்பத்தி வரைக் கொண்டுச் செல்லுமா என்பது பற்றிய விபரத்தை வெளியிடவில்லை. ஆனால், இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு டாடா கார் பிரியர்கள் மத்தியில் தொத்திக் கொண்டு விட்டது. மிக முக்கியமாக சியாரா கார் பிரியர்களோ இந்த கார் கட்டாயம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா மோட்டார்ஸ் சியாரா கார் மாடலின் டிசைனுக்கு பேடண்ட் பதிவு செய்திருப்பது பற்றிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. மேலும், அதன் டிசைனின் படங்களும் இணையத்தின் வாயிலாக வெளியாகி இருக்கின்றன.

இந்த டிசைனை வடிவமைத்தவர் டாடாவின் முன்னாள் முதன்மை வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் ஆவார். இந்த கார் மாடலை மட்டுமல்ல அவர் டாடாவின் வரவிருக்கும் அவின்யா மற்றும் கர்வ் ஆகிய கார் மாடல்களையும் வடிவமைத்தவர் ஆவார். மேலும், இதுபோன்று விற்பனையில் உள்ள இன்னும் பல கார் மாடல்களையும் அவர் வடிவமைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் ஸ்கெட்ச் டிசைன் சியாராவின் முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதியைக் காட்சிப்படுத்தும் வகையில் இருக்கின்றது. மேலும், சியாரா மிகவும் ஸ்ட்ராங்கான மற்றும் பிரமாண்ட வெளிப்புற தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த படம் அமைந்திருக்கின்றது. இத்துடன், அவின்யாவின் தோற்றத்தை பிரதிபலிக்கும் டிசைனும் இந்த காருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், தற்போது வெளியாகி இருக்கும் டிசைன் கான்செப்ட் மாடலில் இருந்தது போலவே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், கான்செப்ட் மாடல் எப்படி இருந்ததே அப்படியே சியாரா விற்பனைக்கு வரும்போது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், க்ரில் மற்றும் பான்னெட் ஆகியவற்றில் லேசான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுதவிர, இன்னும் சில மாற்றங்களையும் இந்த எதிர்பார்க்கலாம். குறிப்பாக, புதிய சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவற்றைப் போல கவர்ச்சியான அம்சங்களைத் தாங்கிய காராக சியாரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக அடாஸ், காலை ஆட்டினால் திறக்கும் டெயில் கேட், பெரிய திரை, இலுமினேட் ஆகும் டாடா லோகோ பிரீமியமான இருக்கை என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

இதுதவிர, ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவற்றைப் போலவே அதிக பாதுகாப்பு தரம் தாங்கியதாகவும் இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சியாராவிற்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். இந்த மாதிரியான சூழலில் இந்த அம்சங்கள் எல்லாம் அக்காரில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது அந்த காரின் பக்கம் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக பாதுகாப்பிற்கும், பிரீமியம் அம்சங்களுக்கு பெயர்போன தயாரிப்பாக டாடா கார்கள் மாறி இருக்கின்றன. மேலும், இந்தியாவின் மின்சார கார் பிரிவின் தலைவனாகவும் டாடா மோட்டார்ஸ் மாறி இருக்கின்றது. விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த சியாரா கார் கூட பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 12:50 [IST]
English summary
Tata sierra suv design patent leaks here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+